பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மொஹெஞ்சொ - தரோ


மிகப் பழைய கால முதலே சிறப்புற்ற தீவாகும். இதன் ஒரு புறம் ஆராய்ச்சி வேலை நடைபெற்றது. அதன் பலனாக, ஆராய்ச்சியாளர் கருத்தைக் கவர்ந்த மட்கலங்களும் பலவகை மணிகளும் வெளிப்பட்டன. ஆராய்ச்சி முற்றுப்பெறவில்லை. மட்பாண்டங்கள் மீது பலவகைச்சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. பல பாண்டங்கள் உடைந்த நிலையில் காணப்பட்டன. அவை, ஒற்றைக் கைப்பிடியும் இரட்டைக் கைப்பிடியும் உடையனவாக இருந்தன. சுண்ணாம்புக் கல்லாலான லிங்கம் ஒன்று கிடைத்தது.[1] மால்ட்டா நாகரிகம் வெண்கலக் காலத்தது என்று ஆராய்ச்சி அறிஞர் கருதுகின்றனர்.

எகிப்து

ஆப்ரிக்காவின் வட பகுதியில் நீல ஆறு பாயும் மருதநில வெளியே எகிப்து என்பது. உலகத்தில் எங்குமே இருந்திராத மிக உயர்ந்த நாகரிகம் அங்கு இருந்த தென்பதற்கு உரிய அடையாளங்கள் மிகப் பல உண்டு. ஆயினும், அவை ஏறக்குறைய நூறாண்டுகட்கு முன் வரை கவனிக்கப்பட்டில. கெய்ரோ முதல் ‘லக்ஸர்’ வரையுள்ள 960 கி. மீ. தொலைவுவரை பழுதுபட்ட பண்டைக்காலத்துச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பண்டை அரசர் கல்லறைகள் பல கோவில்கள் பல கல் மேடுகள் பல உடைந்த சிலைகள் பல கி. மு. 4000 ஆண்டுகட்கு முன்னும் பின்னும் இருந்த எகிப்திய அரசர்கள் தங்கட்கெனக் கட்டிய கல்லறைகளே பிரமிட்கோபுரங்கள் என்பன. அவை சுமார் 80 ஆகும். அவற்றுள் மிகப் பெரியது 6,37,600 ச.செ.மீ பரப்பும் 14,400 செ.மீ. உயரமும் உடையது. அதில் உள்ள கற்கள் 70 லட்சம் டன் நிறையுள்ளவை நான்கு அல்லது ஐந்து அடுக்குகளையுடைய 22 ஆயிரம் வீடுகளைக் கொண்ட நகரம் ஒன்றைக் கட்டி முடிக்கப் போதுமானவை; என்று அறிஞர் அறைகின்றனர். இவ்வியப்பூட்டும் பிரமிட் கோபுரங்களைக் கட்டிய பேரரசர் தம் நாகரிகத்தை


  1. 1. M.A.Murray’s ‘Excavations in Malta’, Parts 1-3