பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

227


ஆஸ்ட்ரேலியர்

இவர்கள் நீக்ரோவர்க்கு அடுத்தபடி இந்தியாவிற் புகுந்தவராவர் . இவர்கள் ஆஸ்ட்ரேலியப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பது பழைய கொள்கை. இவர்கள் பாலஸ்தீனத்திலிருந்து வந்தவர்கள் என்பதே பொருத்தமானது. இவர்கள் நெடுங்காலம் இந்தியாவில் தங்கிவட்டவராவர். முண்டர், கொலேரியர், கொண்டர் முதலியவர்கள் இவ்வினத்தவர்கள். இவர்கள் இன்று இந்தியாவில் உள்ள மலைப் பகுதிகளிலும் காடுகளிலும் வேடர்களாக வாழ்ந்து வருகின்றனர். இன்று இந்தியரிடமுள்ள கருமை நிறத்திற்குக் காரணர் இவரே என்பதை மறத்தல் ஆகாது. பிற்கால ஆரியர் இவர்களைத்தாம் ‘நிஷாதர்’ என்று அழைத்தனர்.

மெலனேஷியர்

மேற்சொன்ன இரண்டு இனத்தவர் கலப்பால் தோன்றிய புதிய இனத்தவரே மெலனேஷியர் என்பவர். இவர்கள் அஸ்ஸாம் - பர்மா எல்லைப்புறங்களிலும் நிக்கோபர் தீவுகளிலும் மலையாளக் கரையிலும் இருக்கின்றனர். பினங்களை எறிந்துவிடும் பழக்கம் இவர்களிடமே தோற்றமெடுத்ததாதல் வேண்டும்.

மத்தியதரைக் கடலினர்

இவர்கள் ஆஸ்ட்ரேலியா மக்கட்குப்பின் இந்தியாவிற் குடிபுகுந்தவர் ஆவர். இவர்கள் பலமுறை அணி அணியாகவந்தவர் ஆவர். முதலில் வந்தவர் கங்கைச் சமவெளியில் இருந்த ஆஸ்ட்ரேலியருடன் கலந்து, அவர்களது மொழியை மாறுதல் பெறச் செய்தனர்; தங்கள் கூட்டு மொழியை ஆஸ்ட்ரேலியரைப் பேசச் செய்தனர். இம்மக்கள் நீர்ச்செலவு, பயிரிடல், கற்கருவிகள் இவற்றை இந்தியாவில் தோற்றுவித்தனர். இவர்கட்குப் பின்னர் இவர் தம் இனத்தவரே அடுத்த அணியாக இந்தியாவிற்குள் வந்தனர். அவர்கள், மெசொபெர்ட்டேமியாவில் அர்மீனியரோடு கலந்து வளர்த்த நாகரிகத்தை இந்தியாவிற்குக்