பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

மொஹெஞ்சொ - தரோ


கொணர்ந்தனர். அவர்கள் புறப்பட்ட இடத்திலேயே அல்பைனர், அர்மீனியர் ஆகியவர்தம் இரத்தக்கலப்புடையவர்; நாகரிகக் கலப்பும் உடையவர் (அவர் கூட்டத்தினரே சுமேரியர் என்பவர்) அம்மக்கள் இந்தியா வந்து ஆஸ்ட்ரேலிய மக்களுடன் கலந்து உறவாட வேண்டியவராயினர். இங்ஙனம் இரண்டாம் முறை வந்த மக்கள் மொழியும் முன் சொன்ன கூட்டுமொழியே ஆகும்.

மங்கோலியர்

அஸ்ஸாமில் காசி மலைகளில் ‘மான்-கெமர்’ மொழிகளைப் பேசும் மலைவாழ்நர் இவ்வினத்தினர் ஆவர். இவர்கள் பர்மாவில் உள்ள மலைப்பகுதிகளிலும் மலேயா தீபகற்பத்திலும் நிக்கோபர் தீவுகளிலும் உறைகின்றனர். தூய மங்கோலிய இனத்தவர் மிகச்சிலராக வடகிழக்கு வழியே வந்து அஸ்ஸாம், வங்காளம் முதலிய இடங்களில் தங்கினர் எனக் கோடலும் பொருந்தும்.

அல்பைனர்

இவர்கள் வலிய உடற்கட்டுடையவர்; பாமீர்ப் பீடபூமிப் பகுதிகளிலிருந்து வந்தவர் ஆவர். இவர்தம் கலப்பு மஹாராஷ்டிரரிடமும் பிரபுமாரிடமும் காணப்படுகிறது. இவர்கள் பேசியது இந்து- ஐரோப்பிய மொழி ஆகும். இவர்கள் சிந்து வெளியில் இருந்து மொஹெஞ்சொ-தரோ முதலிய நகரங்களை நிலைகுலையச் செய்து, மேற்கு இந்தியாவில் தங்கினவராதல் வேண்டும்; பின், ஆரியர் தாக்குதலால் அலைப் புண்டு வங்காளம் வரை பரவினர் என்பது தெரிகிறது.[1]

இதுகாறும் கூறியவற்றால், இந்தியாவில் இருந்த பண்டை மக்கள் நீக்ரோவர் என்பதும், அவர்களுக்குப் பின் வலிவுடன் இருந்தவர் ஆஸ்ட்ரேலியர் என்பதும், அவர்களுக்குப் பின் இந்தியாவிற் புகுந்து மிக்க, சிறப்புடன்


  1. R.K.Mookerji’s ‘Hindu Civilization’ pp. 32-37