பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

235


தாசர் தலைவனான சம்பரனுக்[1] குரிய 90 முதல் 100 வரைப்பட்ட நகரங்கள் அழிக்கப்பட்டன....”[2]

“குயவன் (Kuyava) ஆரியர் செல்வங்களை அறிந்து வந்து தனக்கு உரிமையாக்கிக் கொள்கிறான். அவன் தண்ணிரில் இருந்துகொண்டு அதனைத் தூய்மையற்ற தாக்குகிறான். அவனுடைய இரண்டு மனைவியர் ஆற்றில் நீராடுகின்றனர். அவர்களைச் ‘சிபா’ (Sifa) ஆற்று வெள்ளம் கொண்டுபோவதாக அயு (Ayu) என்பவன் தண்ணீரில் உறைகிறான். அவனை ஆஞ்சசீ, குலிசி, வீரபத்நீ என்னும் யாறுகள் காக்கின்றன எனவரும் சுலோகங்களால், ‘குயவன், அயு’ என்பவர் வன்மையுள்ள தாசர்கள் என்பதும், ஆரியர் கிராமங்களைக் கொள்ளையிட்டனர் என்பதும், யாறுகளால் சூழப்பட்ட கோட்டைகட்குள் இருந்தவர் என்பதும் அறியக் கிடக்கின்றன.... ‘இந்திரன், பகைவரது கறுப்புத் தோலை உரித்து, அவர்களைக் கொன்று சாம்பராக்குகிறான்.... இந்திரன் பகைவருடைய 150 படைகளை அழித்தான்... ஒ, அஸ்வணிகளே! நாய்களைப் போல விகார ஓசை யிட்டுக்கொண்டு எங்களை அழிக்க வரும் பகைவரை அழியுங்கள். இந்திரன் வித்ரனைக் கொன்று நகரங்களை அழித்துக் கறுப்புத் தாசர் படைகளையும் அழித்தான்... ஆரியருடைய போர்க் குதிரைகளைக் (ததிக்ரா) கண்டதும் தாசர் நடுங்குகின்றனர்; அக்குதிரைகள் ஆயிரக்கணக்கான தாசரை அழித்தன... இந்திரன் தாசர் மரபினரான நவவாஸ்த்வா என்பனையும் ப்ரிஹத்ரதனையும் கொன்றான்... ‘ஓ, கடவுளரே! நாங்கள் நெடுந்துரம் வந்து, கால் நட்ைகள் மேய்ச்சல் பெறாத இடத்தை அடைந்துவிட்டோம். இப்பரந்த இடம் தர்ஸ்யுக்கட்கே புகலிடமாக இருக்கின்றது, ஒ ப்ரஹஸ்பதி! எங்கள் கால்நடை களைத் தேடிச் செல்லும் நேர்வழியில் எங்களைச் செலுத்து.


  1. சம்பான் இந்திரனைத் தோற்றோடச் செய்தவன் எனவும் தசரதனால் வெல்லப்பட்டவன் எனவும் வரும் இராமாயணச் செய்தி இங்கு உணரத்தக்கது. - கையடைப்படலம், செ.8.
  2. R.K.Mookerji’s ‘Hindu Civilization’, p.72.