பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

மொஹெஞ்சொ - தரோ


நாங்கள் வழி தவறிவிட்டோம்!.... இத்தகைய பலவாக்குகளை நோக்க, வந்தேறு குடிகளான ஆரியர், தொடக்கத்தில் பண்டை இந்திய மக்களால் பட்ட பாடு சிறிதன்று என்பதும், அவர்கள் பகைவரை மெல்ல மெல்ல வென்றே நாட்டைத் தமதாக்கிக் கொண்டனர் என்பதும், அவ்வேலைக்குப் பல நூற்றாண்டுகள் ஆகி இருத்தல் வேண்டும் என்பதும் அறியத்தகுவனவாம்”.[1]

“இந்திரன் தாசரைக் கொலை செய்து, அவர்களுடைய ஏழு பாசறைக் கோட்டைகளையும் அழித்து, அவர்கள செல்வத்தைப் புருகுத்ஸனுக்குக் கொடுத்தான்”.[2]

இந்து அநாரியர் சிந்துவெளி மக்களே

‘ஆரியர் திருவாக்குகளால் நாம் அறிவதென்ன? ஆரியர் அல்லாத தாசர்கள் வணிகர்களாக இருந்தனர்; செல்வர்களாக இருந்தனர்; பாதுகாப்பு மிகுந்த நகரங்களில் வாழ்ந்திருந்தனர்; தாச அரசர்கள் 100 நகரங்கள் வைத்துக்கொண்டு பேரரசு செலுத்தி வந்தனர், போதிய வன்மை பெற்ற ஆரியரையே எதிர்த்து நின்று போரிட்டனர்; (ஆரியர்க்கு) விளங்க முடியாத மொழி பேசினர்; மந்திர மாயங்களில் வல்லவர்கள்; தமக்கென்று அமைந்த வழிபாடுகளை உடையவர்கள்; கால் நடைகளை உடையவர்கள்; பணத்திற் கண்ணானவர்’ என்பனவே.

இக்குறிப்புகளைச் சிந்து வெளியிற் புதையுண்டு கிடக்கும் நூற்றுக்கு மேற்பட்ட நகரங்களைப் பற்றிப் புதை பொருள் ஆராய்ச்சியாளர் ஆண்டு தோறும் அறிவித்து வரும்


  1. R.C.Dutt’s ‘Civilization in Ancient India’, Vol. I. pp. 49,58.
  2. R.P.Chanda’s article on Survival of the Pre-historic Civilization of the I. Valley’ in ‘Memoirs of the A.S. of India’ No. 41, p.3