பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

239


சிந்துவெளி மக்கள் சிறந்தி வணிகர் என்பது தெரிகின்றது. அவர்களது நாட்பட்ட நாகரிகம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட ஏஜியன் நாகரிகம் அழிந்ததுபோல, ஆரியர் படை யெடுப்பால் அழிந்துவிட்டது. இவ்வுலகத்தையே பற்றிய கலைகளில் (Material Culture) ஆரியர் சிந்துமக்கட்குக் குறைந்தவரே யாவர். அவர்கள் சிந்து மக்களின் நகரங்களை அழித்திருக்கலாம் அல்லது தாமாகவே அழிந்து போக விட்டிருக்கலாம்.”[1]

“ஹிந்து சமயத்தின் அடிப்படையான கொள்கைகள் பல இந்திய ஆரியர் மூலம் வந்தவை என்று கூறக்கூடவில்லை. அக்கொள்கைகளுட் சிறந்தவை-சிவ வணக்கம் சக்தி (தாய்) வணக்கம், கிருஷ்ண வணக்கம், நாக வணக்கம், யக்ஷர் வணக்கம், விலங்கு வணக்கம், மர வணக்கம், லிங்கயோனி வணக்கம், யோகம், ஒரு கடவுள் வணக்கங்கொண்ட பக்தி மார்க்கம் என்பன. ஆனால், இவற்றுள் கிருஷ்ண வணக்கம் ஒன்று தவிர், ஏனைய அனைத்தும் சிந்து வெளி நாகரிக மக்களிடம் இருந்தனவே ஆகும். எனவே, பிற்கால வேதங்கள் முதலிய அளவிறந்த நூல்களிற் பலபடியாகக் கூறப்பட்டுள்ள இவ் வநாரிய பழக்க வழக்கங்களும் வழிபாடுகளும் ஆரியர்க்குப் புறம்பானவையே ஆகும். ஆதலின் இவற்றைச் சிந்துவெளி மக்களிடமிருந்தே ஆரியர் பெற்றனர் என்பதில் ஐயமுண்டோ?[2]

சிந்துவெளி மக்கள் யாவர்?

இதுகாறும் கூறப்பட்ட பற்பல செய்திகளால், ரிக் வேத ஆரியர்க்கு முன் இந்தியாவில் சிறந்த நாகரிகங் கொண்ட வகுப்பார் இருந்தனர் என்பதையும், அந்த வகுப்பாருடன்றான் ஆரியர் போரிட்டனர் என்பதையும், அவ் வகுப்பாரே சிந்து


  1. R.P.Chanda’s Article in ‘Memoirs of the A.S. of India’ No.31, pp.4, 5.
  2. Sir John Marshall’s, ‘mohenjo-Daro and the Indus Civilization’, Vol. Ipp. 77, 78.