பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

மொஹெஞ்சொ - தரோ


வெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தவர் என்பதையும் தெளிவுற உணர்ந்தோம்.இங்கு அச் சிந்துவெளிமக்கள் யாவர் என்பதைக் காண்போம் :

“சிந்து - கங்கை வெளிகளில் ஆரியரை எதிர்த்து நின்றவர் திராவிடரே என்பதற்கு உறுதியான காரணங்கள் பல உண்டு :

(1) ரிக்வேத தாசர்கள் ‘கறுப்பர்கள், தட்டை மூக்கினர்’ என்பன இன்றுள்ள திராவிடர்பால் காணப்படும் பண்புகளே யாம்.

(2) ரிக் வேதம் கூறும் தாசர் சமய உணர்ச்சிகள் அனைத்தும், லிங்க-யோனி வழிபாடு முதல் மந்திர-வசியம் ஈறாக அனைத்தும் இன்றைய திராவிடரிடம் இருத்தல் கண்கூடு.

(3) அதர்வ வேதத்திற் குறிப்பிடப்பட்டுள்ள கடல் கோள் (Deluge) ஆரியர் சொத்தன்று. அது திராவிடர் கதையே ஆகும். அக்கதை, ஒரு சில சிறிய விவரங்கள் போகப் பெரிதும் சுமேரியர் கடல்கோட் கதையையே ஒத்துள்ளது. சுமேரியர் திராவிடர் இனத்தவர்-ஒட்டு மொழியினர்’ என்று டாக்டர் ஹால் போன்ற ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். அக்கடல்கோள் கதை குமரிக் கண்டத்தின் (லெமூரியா) அழிவைக் குறிப்பிட்டதாகலாம். அக்கதையைக் குறிக்கும் வடமொழிப் பகுதியில் மீன், நீர் (Mina, mira) என்னும் சொற்களே காணப்படுகின்றன. இவ்விரண்டு சொற்களும் திராவிடச் சொற்கள். ரிக்வேதம் முழுவதிலும் மீனைப் பற்றிய குறிப்பு ஒரிடத்திற்றான் காணப்படுகிறது. அங்கும் அது ‘மச்சம்’ என்னும் சொல்லாற்றான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மீன், சுமேரியர் வரலாறுகளில் பெரும் பங்கு கொண்டதாகக் காணப்படுகிறது; சிந்துவெளியிலும் அங்ஙனமே.[1] வடமொழியிற்


  1. தமிழரசராய பாண்டியர் மீன்கொடி உடையவர் மீனவர் மதுரைப் பேரலவாயர்தம் மனைவியார் (உமாதேவியார்) பெயர் மீன் கண்ணி (மீனாக்ஷி) என்னும் செய்திகள் ஈண்டு உணர்தற்குரியன.