பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

241

கூறப்படும் கடல் கோட் கதையின் நாயகனான ‘சத்யவ்ரத மது’ என்பவன் ‘திராவிடபதி’ என்று பாகவதம் முதலிய புராணங்களிற் கூறப்பட்டுள்ளான். மேலும், மச்சபுராணம் கூறும் கதையில், சத்யவிரத மது பொதிய மலையில் இருந்து தவம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இக்குறிப்புகளால், அக் கடல்கோட் கதை திராவிடருடையதே என்பது வெளியாதல் காண்க

(4) ரிக்வேத ஆரியர் பெயர்கள் தந்தை பெயரைக் கூட்டிப் ‘புருகுத்ஸ- கெய்ரிக்ஷித், கக்க்ஷிவந்த்-அவுசிஜா, சுதஸபய்ஜவன’ - என்று சொல்லப்பட்டன. இங்ஙனம் கூறலே ஆரியர் முறை. ஆனால், பிற்கால பிராமணங்களில் (Brahmanas) தாயின் பெயரையும் கூட்டி, “சத்யகாம-ஜாபால, மஹிதள அயித்ரேயா, ப்ரஸ்னிபுத்ர-அசுரிவசின் சஞ்சீவி-புத்ர, கிருஷ்ண-தேவகி புத்ர என்று வழங்கப்பட்டுள்ளன. இங்ஙனம் தாய்க்கு உயர்வு தரல் திராவிடர் பழக்கமாகும். இது சுமேரியரிடமும் இருந்த பழக்கமே ஆகும். இவ்விருபாலரிடமும் குடும்பத்தின் தலைமைப் பதவி பெண்ணிடமே இருந்தது.[1] இப்பழக்கம் ஆரியர் கையாள லாயினர் என்பதை நோக்க, கங்கைச் சமவெளியில் திராவிடர் செல்வர்க்கு இருந்த நிலைமை நன்கு வெளியாகின்றது.

“ஆரியர்க்கு அடங்கிய திராவிடர் ஆரியர் பழக்க வழக்கங்களை ஒரளவு கைக்கொண்டாற் போல - திராவிடரால் அடக்கப்பட்ட ஆஸ்ட்ரேலிய (முண்டா-கோல்) இனத்தவர் திராவிடர் ஆக்கப்பட்டனர். அவர்தம் மொழிநாளடைவில் மறைப் புண்டது; பழக்க வழக்கங்கள் மாறுபட்டன. அவர்கள், அநாகரிகராதலின், அவரினும் பல படி உயர்ந்த திராவிடர் நாகரிகத்தில் கலப்புண்டனர்; திராவிட மொழிகளையே பேசலாயினர். இன்றும் அவர் மரபினராகவுள்ள கொண்டர், ஒராஓணர், இராஜ் மஹாலியர், கூயர் முதலியோர் ‘திராவிடரோ?’ என்று ஐயுறத்தக்க அளவு அவர் தம் மொழிகளில் பேரளவு திராவிடம்


  1. தமிழில் இல்லாள் (வீட்டுக்கு உரியவள்) என்னும் சொல்லுக்குச் சரியான ஆண்பாற் சொல் இன்மையை உணர்க.