பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

மொஹெஞ்சொ - தரோ


கலந்திருத்தல் காண்க. இந்நிலைமை, ஆரியர் வருதற்கு முன்னரே ஏற்பட்டதாதல் வேண்டும் அன்றோ? எனவே, ஆரியர் வருதற்கு முன்பே, முண்டர் முதலிய ஆஸ்ட்ரேலிய மக்கள் பெரும்பாலும் திராவிட சோதியிற் கலந்துவிட்டனர் என்பது தெளிவு ஆதலின், ஆரியர் கலையில் உண்டாகியுள்ள (ரிக்வேதத்திற்கு மாறுபட்ட இந்து ஐரோப்பி முறைக்கு மாறுபட்ட) மாற்றங்களுட் பெரும்பாலன திராவிடருடையனவே ஒழிய மங்கோலியருடையனவோ ஆஸ்ட்ரேலியருடையனவோ அல்ல அல்ல!!”[1]

“ஆரியர்க்கு முன் இந்தியாவில் இருந்த மக்களுள் திராவிடரே உயர்ந்த நாகரிகமுடையவர் என்று கருதப்படுகின்றனர். அவர்க்குள் பெண்களே குடும்பத்தலைவியர், திராவிட சங்கத்திலும் மதத்திலும் தாய்மையே பெரும் பங்கு கொண்டதாகும்”.[2]

“ரிக் வேதம் இழித்துக் கூறும் லிங்க-யோனி வழிபாடு இன்றும் திராவிடரிடமே சிறப்பாகக் காணப்படுவதாகும். இவ்வழிபாட்டுக் குறிப்பு ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ளதால், திராவிட மக்கள் பழைய காலத்தில் பலுசிஸ்தானம் உட்பட இந்தியா முழுவதும் இருந்தனராதல் வேண்டும்”.[3]

“ரிக்வேதத்திற் கூறப்படும், ‘தாசர், தாஸ்யுக்கள், வணிகர்’ என்பவர் தம் வருணனை இன்று அநாகரிய மக்களிடம் இருப்பதைக் கண்ட ஆராய்ச்சியாளர், அவர்களைத் ‘திராவிடர்’ என்று குறிப்பிட்டனர். இன்று அவர்கள் இழிநிலையில் இருப்பதைக் கொண்டு, அவர்களது பழம்பெருமையை அறிஞர்கள் அசட்டை செய்து விட்டனர். அவர்கள் அநாகரிகர்; காடுகளில் வசித்தவர்; கலைகள் அற்றவர்; ஆரியர் இந்தியா வந்த பின்னரே திருத்தம்


  1. N.K.Dutt’s ‘The Aryanisation of India’, pp.65, 76-84.
  2. E.B.Havell’s ‘The History of Aryan Rule in India’, pp.11-13.
  3. Babu Govinda Das’, Hinduism’, p.185.