பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மொஹெஞ்சொ - தரோ


பட்டன. கல் எந்திரங்களும், கல்வங்களும் குழவிகளும், வேறுபல உருண்டைக் கற்களும் கண்டெடுக்கப்பட்டன.[1]

அசிரியா

இந்நிலப்பகுதி மெசொப்பொட்டேமியாவுக்குக் கிழக்கிலும் குர்திஸ்தானத்துக்கு மேற்கிலும் பாபிலோனியாவுக்கு வடக்கிலும் அர்மீனியாவுக்குத் தெற்கிலும் அமைந்திருப்பது இதன் தலைநகரம் அசுர் என்பது. இந்நாட்டின் முக்கிய நகரங்கள் மோசுல், நினவெஹ், கலா, ரெசன் முதலியனவாம். இந்நாடு மிக்க செழிப்புள்ளது. இங்குக் களிமண் மிகுதியாகக் கிடைத்தமையால், பண்டை அசிரியர், செங்கற்களால் வீடுகளைக் கட்டிக்கொண்டு உயர்ந்த நாகரிகத்தில் வாழ்ந்து வந்தனர். செங்கற்களிலும் கருங்கற்களிலும் இந்நாடு பாபிலோனியாவைவிடச் சிறப்புடையதே ஆகும். மேற் குறிப்பிட்ட நகரங்கள் ஒரு காலத்தில் மிகச் சீரும் சிறப்பும் பெற்று இருந்து, பின்னர் மண்மேடுகளாய் மங்கிப் போனவை ஆகும்.

பாபிலோணா

இந்நிலப்பகுதி யூப்ரேடிஸ், டைக்ரிஸ் யாறுகளுக்கு இடையில் உள்ள மருதநிலப் பகுதியாகும். இங்குச் சிறந்த களிமண் கிடைத்தமையால், இங்கு வாழ்ந்த பண்டை மக்கள் மட்பாண்டங்கள் செய்வதிலும் செங்கற்கள் செய்வதிலும் சிறப்புற்றிருந்தனர். ஆற்றோரங்களில் வளர்ந்த கோரை கூரையாகவும் கூடையாகவும்பாயாகவும் பயன்பட்டது. இங்கு விளை பொருள்கள் அதிகமாகும். பாபிலோனியர், இவை நீங்கலாக உள்ள கற்கள், தேக்கமரம், பெர்ன் வெள்ளி முதலிய உலோகங்கள் ஆகியவற்றைச் சுற்றுப் பக்கத்து நாடுகளிலிருந்து வரவழைத்துக் கொண்டனர். எனவே, அவர்கள் சிறந்த வாணிபத்திறமை உடையவர்களாக இருந்திருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.


  1. 1. Charles Warren’s ‘Underground Jerusalem’.