பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

மொஹெஞ்சொ - தரோ


கால (காலம்), குட (குடி), கண, நானா (பல), நீல, புஷ்பம், பூசனை, பல (பழம்) பீஜ (விதை), மயூர (மயூரம்-மயில்), ராத்ரி (இரவு), ரூப(ம்).

“...மேற்சொன்ன உச்சரிப்பு, வாக்கிய அமைப்பு முறை, சாரியை உருபு முதலியவற்றைச் சேர்க்கு முறை இன்ன பிறவும் பழைய சம்ஸ்கிருதத்திலோ, இந்து-ஐரோப்பிய மொழிகளிலோ இல்லை. ஆனால், இவை அனைத்தும் இன்றுள்ள வடஇந்திய மொழிகளில் இருக்கின்றன. இவை எங்கனம் வந்தன? இவை அனைத்தும் திராவிட மொழிகளிற்றாம் உள்ளன. எனவே, திராவிட மொழிகளின் செல்வாக்கு எந்த அளவு வட இந்தியாவில் இருந்தது என்பதை விளக்க இதைவிடச் சிறந்த சான்று வேண்டுவதில்லை... வடமொழி இந்தியாவில் நுழைந்த காலம் முதலே திராவிடச்சொற்களைக் கடன் பெறலாயிற்று. பலுசிஸ்தானத்தில் உள்ள ‘ப்ராஹுயி’ மக்கள் திராவிடம் பேசுபவர். பாரசீகத்திலும் திராவிடம் பேசிய மக்கள் இருந்திருக்கலாம். ஆரியர் அத்திராவிடரோடும் பழக்கம் கொண்டிருக்கலாம்...

“ஆரியர் திராவிடரை எளிதில் விரட்டி நாட்டைக் கைப் பற்றக் கூடவில்லை. திராவிடர்கள் பலுசிஸ்தானத்திலிருந்து வங்காளம் வரை இருந்தனர். ஆரியர் அவர்களை மெதுவாகவும் படிப்படியாகவுமே வென்றனர் ஆயினும், திராவிடர் தங்கள் கலையையும் மொழியையும் ஆரியர் மீது தெளித்தனர் என்பது உண்மை.

“ரிக் வேத ஆராய்ச்சியால் ஆரிய மக்கள் தமக்கு முன் வட இந்தியாவில் இருந்த மக்களைப் போரில் வென்று குடி புக்கனர் என்பதையும், அவர்தம் மொழி கிரேக்கம் முதலிய இந்து-ஐரோப்பிய மொழிகளையே முதலில் ஒத்திருந்தது என்பதையும், ஆரியர் பழக்க வழக்கங்களையும் நன்குணரலாம். இம்மக்கட்கு முற்றும் மாறுபட்ட நாகரிகத்தையும் மொழியையும் கொண்டு, இம்மக்களோடு போரிட்ட திராவிடருடைய பழக்க