பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

251

கிறது. இத்திராவிடரே தமது சிந்து நாகரிகத்தை ஆரியர்டால் ஒப்படைத்தவர் ஆவர்”.[1]

“சிந்து வெளியிற் காணப்பட்ட எழுத்துக்களையும் மொழியையும் கொண்டிருந்த மக்களே பிற்காலத்தவூரான் ‘திராவிடர்’ எனப்பட்டனர்; அவர் தம்மொழி ‘திராவிடம்’ எனப்பட்டது. அவர்கள் மத்தியதரைக்கடற் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி வந்து சிந்து வெளியில் தங்கினர்; தமக்கு முன் சிந்துவெளியில் இருந்த ஆஸ்ட்ரேலிய மக்களுடன் கலந்து நெடுங்காலம் ஆயினமையின், தம் வெண்மை நிறத்தையும் உருவ அமைப்பையும் இழந்து, இன்றுள்ள திராவிடரைப் போல ஆயினர். அவர் கொண்டுவந்த மொழியும் ஆஸ்ட்ரேலியர் கூட்டுறவினால் சிறிது மாறுபட்டிருக்கலாம். எனினும், சிந்துவெளி எழுத்துகளே பிற பண்டை நாகரிக நாட்டு மொழிகம் குத் தாய்மொழியாகும். மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த மக்களும் தென் இந்திய திராவிடரும் ஒர் இனத்தவரே. அவர்கள் இருபிரிவினரும் பேசியமொழி ஒன்றே.சிந்துவெளி மொழிதிராவிடம் என்பதில் ஐயமே.இல்லை. அதுதமிழையே பெரிதும் ஒத்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம்”.[2]

“சுமேரியாவில் உள்ள ‘உருக்’ என்னும் இடத்திற் கிடைத்த பல் பொருள்களுக்கும் சிந்து வெளிப் பொருள்களுக்கும் மிகுதியான ஒருமைப்பாடு காணப்படுகிறது. இதனால், மிகப் பழைய காலத்தில் உருக்’ நாகரிகத்தைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந்த சுமேரியர் இனத்தவரே இந்தியா வந்து, இந்தியாவில் இருந்த பண்டை மக்களோடு கலந்து வாழ்ந்து வந்தனராதல் வேண்டும். அக்கலப்பினர் வழிவழி வந்தவரே சிந்துவெளி மக்களாதல் வேண்டும்”.[3]


  1. Dr.G.R.Hunter’s article in the ‘New Review, (1936) Vol. 1. pp.317,318.
  2. H.Heras’s article in the ‘New Review’, 1836. Vol. H. pp.I-16.
  3. Mackay’s Further Excavations at Mohenjo-Daro Vol. I. p.668.