பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

மொஹெஞ்சொ - தரோ


படும் சொந்தக்காரர் முத்திரை’ (Ownership Marks) எகிப்தில் அரச மரபினர் தோன்றுதற்கு முன்னர் இருந்த பாண்டங்கள் மீதுள்ள முத்திரைகளையே ஒத்துள்ளன. வேறு சில பாண்டங்கள்மீது கோப்பை அடையாளங்களும் கதிரவன் குறிகளும் காணப்படு கின்றன. இவையாவும் சிந்துவெளியிற் கிடைத்துள்ள சித்திரக் குறிகளிற் காணப்படுகின்றன. எனவே சிந்துவெளிக் கலை யுணர்வு டெக்கானுடன் உறவு கொண்டிருந்தது என்பது அறியத்தக்கது.[1]

மைசூர்ப் புதை பொருள் ஆராய்ச்சியின்போது 2 செம்பு நாணயங்கள் கிடைத்தன. அவை நீள் சதுரவடிவின.கோடுடைய யானை உருவம் பொறிக்கப்பட்டவை: யானையின் முதுகுக்கு மேற்புறம் சித்திர எழுத்துகளைக் கொண்டவை. இந்’ நாணயங்களில் ஸ்வஸ்திகா'தமருகம், பல வடிவச் சக்கரங்கள், செடியுடைய தொட்டி தாயித்து, சரிபாதி உருண்டை வடிவம், கேடயம், மணி, சதுரம், மீன், வளர்பிறை, எருது ஆகியவற்றின் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியுள்ளநாணயங்கள் பல திருநெல்வேலிக் கோட்டத்திலும் கிடைத்துள்ளன. இவற்றை நன்கு சோதித்ததில் கீழ்வருவன ஒருவாறு புலனாகின்றன: (1) இந்த எழுத்துக் குறிகள் பெரும்பாலும் சிந்துவெளியிற் கிடைத்துள்ள எழுத்துக் குறிகளையே ஒத்துள்ளன: (2) சில நாணயங்களில் எழுத்துக் குறிகள் ஒரு வரியிலும் சிலவற்றில் இரண்டு வரிகளிலும் உள்ளன; (3) இக் குறியீடுகள் சமயத் தொடர்புடையன மட்டும் அல்ல கதைகளைக்குறிப்பனவுமாகலாம். அவற்றை இப்பொழுது படிக்கக் கூடவில்லை.இவை கொற்கைப்பாண்டியர்பெயர்களோ? அல்லது, வேறு தென்னாட்டு அரசர் பெயர்களோ? (4) இவை எங்ஙனமாயினும், கி. மு. முதல் நூற்றாண்டிற்கு முற்பட்டனவே


  1. P. Mitra’s Pre-historic India’, pp. 272, 273.
    Journal of the Hyderabad Archaeological Society (1917), p. 57