பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

255


ஆகும். இவை, தொடக்க சாதவாஹனர் வெளியிட்ட யானை முத்திரையுடைய சதுர நாணயங்களைத் தோற்றுவிக்கக் காரணமானவையாகும். (5) இவை கிடைத்துள்ள இடங்களில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட நகரங்கள் இருத்தல் வேண்டும்.[1]

“இதிகாச காலத்தில் வட இந்தியாவில் காந்தாரர், மஹறிசர், மச்சர், நாகர், கருடர், பலிகர் முதலிய திராவிட இனத்தவர் இருந்திருக்கின்றனர். எனவே, அவர்தம் முன்னோரே, வடஇந்தியா முழுவதும் ஆரியர் வரும்பொழுது இருந்தவர் ஆவர். ஆகவே அத்திராவிடரே மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா முதலிய நகரங்களைக் கட்டியவர் ஆவர்.[2]

“சிந்து மாகாண ஹைதராபாத் நகரம் ஒரு காலத்தில் சிந்து மாகாணத்தின் தலைநகரமாக இருந்திருத்தல் வேண்டும். அது நாக அரசனான திராவிட வேந்தனது பெரிய நாட்டின் தலைநகரமாகும். அங்கிருந்தே வெளி நாடுகட்கு ‘மஸ்லின்’ சென்றது. அது சிறந்த வாணிபத் தலமாக இருந்து வந்தது... ஆரியர்க்கு முன், வடக்கிலும்... வடமேற்கிலும் இருந்த திராவிடர், தம் இனத்தவரான கமேரியரோடு சிறக்க வாணிபம் செய்து வந்தனர்...[3]

“இன்று இந்தியாவில் உள்ள மொழியினங்கள் மூன்று. அவை: (1) ஆசிய-ஆஸ்ட்ரிய மொழிகள் (2) திராவிட மொழிகள் (3) இந்திய-ஆரிய மொழிகள் என்பன. திராவிடர் ஆஸ்ட்ரேலியரை அடிமைப்படுத்தியோ, விரட்டியோ தம் மொழியைப் பரவச் செய்தனர். அவர்க்குப் பின்வந்த ஆரியர் திராவிட மொழிகளை அழுத்திவிட்டு ஆரிய மொழியைப் பரப்பினர்.... இன்றுள்ள திராவிடர், உயரத்திலும் உருவ அமைப்பிலும் மண்டை ஒட்டளவிலும் ஏறக்குறைய சுமேரியரையே ஒத்துள்ளனர்.


  1. ‘Archaeological Survey of Mysore’, (1935), pp. 67-71.
  2. R.D.Banerji’s ‘Pre-historic Ancient and Hindu India, p.10.
  3. Ragozin’s ‘Vedic India’, p.398.