பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

மொஹெஞ்சொ - தரோ


சுமேரியர் மொழியும் ஒட்டு மொழியே ஆகும். சிந்துவெளியிற் காணப்படும் மொழியும் ஒட்டு மொழியே யாகும். சிறப்பாகத் தமிழரிடம் அர்மீனியர் மத்தியதரைக் கடலினர் கலப்புக் காணப்படுகிறது; சுமேரியரும் இக்கலப்புடையவரே. மேலும், - சிந்துவெளி மக்கள் திராவிடரே என்பதை அறிவிப்பதுபோலப் பலுசிஸ்தானத்தில் உள்ள ப்ராஹுயி மொழியிற் பேரளவு திராவிடம் காணப்படுகிறது. இன்னபிற காரணங்களால், சிந்துவெளி மக்கள் திராவிடரே எனலாம். அத்திராவிடர் மத்தியதரைக்கடற் பகுதிகளிலிருந்து வந்தனராதல் வேண்டும். என்னை? அவர்கள் ஈரானிலும் மெசொபொட்டேமியாவிலும் இருந்த மக்கள் இனத்தவர் ஆவர்; மேலும், அங்குள்ள சில இடங்களின் பெயர்கள் திராவிட மூலத்தைக் கொண்டனவாக இருக்கின்றன: மெசொபொட்டேமியாவில் உள்ள மிட்டனி (கரியன்) என்னும் இடத்தில் பேசப்படுகின்ற மிகப் பழைய மொழியில் இன்றைய திராவிடச் சொற்கள் மிகப் பல இருக்கின்றன; ஆதலின் என்க..... எனவே, ‘ஆரியர் வருவதற்கு முன்பு இந்தியாவில் அநாகரிக ஆஸ்ட்ரேலிய இனத்தவர் தாம் இருந்தனர் என்று இதுகாறும் கூறி வந்த கூற்றெல்லாம் தவறு என்பதும், புகழ் பெற்ற மெசொபொட்டேமிய நாகரிகங்களுடன் தொடர்பு கொண்டிருந்த உயரிய திராவிட நாகரிகம் ஒன்று ஆரியர் வருகைக்கு முன்னரே இந்தியாவில் இருந்த தென்பதும், திராவிடரே இந்தியாவிற்குக் கலை உண்ர்வை ஊட்டினவர் என்பதும் அறியத்தக்கன”.[1]

“ப்ராஹுயி மக்கள் திராவிட மொழியைப் பேசுவதைக் கண்டு உடல்நூல் புலவர் திகைக்கின்றனர். கிசியெர்ஸன் முதலிய மொழிவல்லுநர் கூற்றுப்படி திராவிடம் தென் இந்தியாவிற்றான் பேரளவு பேசப்படுகின்றது; சிறிதளவு நடு மாகாணங்களிலும் வங்காளத்திலும் பேசப்படுகிறது. வடமேற்கு இந்தியாவில் பலுசிஸ்


  1. R.K.Mookerji’s Hindu Civilization’, pp. 36-39.
    N.K.Dutt’s ‘Aryanisation of India’, p.65.