பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

259


நடுத்தரத்திலிருந்து அகன்ற நிலைவரை அமைந்துள்ள மூக்கு இவற்றைப் பெற்றவர்.

(6)மங்கோலிய-திராவிடர்-வங்காளத்திலும் ஒரிஸ்ஸாவிலும் இருப்பவர் அகன்ற தலை, கறுத்ததோற்றம், நடுத்தரமூக்கு உடையவர்.[1]

(1) “ஆரியர் - பஞ்சாப், காஷ்மீரம், இராஜபுதனத்தின் ஒரு பகுதி ஆகிய இவ்விடங்களில் காணப்படுகின்றனர்; (2) திராவிடர் தென்னிந்தியா முழுவதிலும் இருக்கின்றனா.: (3) மங்கோலியர் இமயமலை அடிவாரத்திலும் வடகிழக்கு எல்லைப்புறங்களிலும் இருக்கின்றனர். ஏனைய பகுதிகளில் இருப்பவர் இம்மூன்று வகுப்பினரால் உண்டான கலப்பு மக்களேயாவர்; அவர்கள் ஆரிய திராவிடர், மங்கோலிய-திராவிடர், சிதிய-திராவிடர் எனப்படுவர்.

(1) ஆரிய-திராவிடர் என்பவர் பீஹார், ஐக்கியமண்டிலங்களிலும் இராஜபுதனத்தின் ஒரு பகுதியிலும் இருக்கின்றனர்.

(2) மங்கோலிய-திராவிடர் என்பவர் ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மூன்று மண்டிலங்களிலும் இருக்கின்றனர்.

(3) சிதிய-திராவிடர் என்பவர் வடமேற்கு இந்தியா (சிந்து முதலிய பகுதிகள்), மஹாராஷ்டிர மண்டிலம், இராஜபுதனத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் இருக்கின்றனர்...[2]

இவ்விரண்டு கூற்றுக்களாலும் ஆரியர் சிதியர் மங்கோலியர் என்பவர் பண்டை வட இந்தியத் திராவிடருடன் கலந்தனர் என்பது நன்கு விளங்கும் விளங்கவே, வடஇந்தியா முழுவதிலும் (சிந்து முதல் அஸ்ஸாம் வரை) திராவிடர் பரவி இருந்தனர் என்பது வெள்ளிடை மலைபோல் விளக்கமாதல் காண்க.


  1. Sir Herbart Risly in the ‘Census Report’ for 1901.
  2. C.E.M.Joad’s ‘Indian Civilization’, pp.21-23.