பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

மொஹெஞ்சொ - தரோ


நெடுங்காலம் வாழ்ந்த மக்கள்

சிந்துவெளி மக்கள் நாகரிகம் திடீரென ஏற்பட்டதன்று. அஃது, அவ்விடங்களில், நாம் கண்ட பொருள்களுக்கு உரிய காலத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்தே, இந்தியாவிற்றானோ இடம்-பொருள்-ஏவல்கட்கு ஏற்றபடி வளர்ச்சி பெற்று வந்ததாகும். நாம் இந்த உண்மையை ஒருபோதும் மறத்தல் ஆகாது.[1] திராவிடர் மத்தியதரைக் கடற்பகுதிகளிலிருந்து இந்தியா வந்தனர் என்பது பலர் கருத்து. அஃது உண்மையாயின் அவர்கள் இந்தியாவிற்கு வந்து, தங்கட்கு முற்பட்ட ஆஸ்ட்ரேலிய மக்களுடன் கலந்து பல காலம் வாழ்ந்தனராதல் வேண்டும்; அவர்கள் கலப்பால் உருமாறினவராதல் வேண்டும். அதனாற்றான் சிந்து மண்டை ஓடுகள் சிறிது வேறுபட்டனவாக இருக்கின்றன. சுமேரியர் எழுத்துக் குறிகளைப் பல அம்சங்களில் ஒத்திருப்பினும், சிந்து வெளி எழுத்துக் குறிகள் இந்திய முறைக்கு ஏற்பச் சில மாறுதல்களைப் பெற்றுள்ளன. சமய வேறுபாடுகளும் சில காணப்படுகின்றன.[2]

“சிந்துவெளி எழுத்துக் குறிகள் சில, ஆஸ்ட்ரேலியர் மொழிகளில் உள்ள சில அம்சங்களைப் பெற்றுள்ளன என்பது தெளிவாகிறது”.[3]

“சிந்துவெளி மக்கள் பன்னெடுங்காலம் இந்தியாவிலேயே வாழ்ந்தவர் ஆவர். அவர்தம் ஒப்புயர்வற்ற நகரங்களும், பிற நாகரிக நாடுகளின் சமயங்களிற் காணப் பெறாத


  1. I should like to stress the point once again - that th: culture represented must have had a long antecedent history eu the soil of India, taking us back to an age that at present can only be dimly surmised” - Sir John Marshall’s ‘Mohenjo-Daro and the Indus Civilization, Vol.I.Preface, p. viii& p 106.
  2. Ibid. pp. 106 & 107.
  3. Dr.G.R.Hunter’s ‘The Script of Harappa & Mohenjo-Daro’, p.91.