பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

261


மரவணக்கம் விலங்கு வணக்கம் லிங்க வணக்கம் முதலியனவுமே இவ்வுண்மைக்குச் சான்றாகும்”.[1]

முடிவுரை

இதுகாறும் கூறிய பற்பல ஆராய்ச்சியாளர் முடிவுகளால், (1) ஆரியர் வருகைக்கு முன் சிந்து வெளியிலும் பிற இந்தியப் பகுதிகளிலும் பெருந் தொகையினராக இருந்த மக்கள் திராவிடரே என்பதும், (2) அவர்களே மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா முதலிய நூற்றுக்கணக்கான அழகிய நகரங்களை அமைத்துக் கொண்டு சிந்துவெளியிற் சிறப்புற வாழ்ந்து வந்தவர் என்பதும், (3) அத்திராவிடர், அக்காலத்திய எகிப்தியர்-சுமேரியர் முதலியவரை விட உயர் நாகரிகத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதும், (4) அவர்கள் மத்தியதரைக் கடற் பகுதியிலிருந்து பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவந்தவர் என்பதும்[2] (5) இந்தியாவில் இருந்த ஆஸ்ட்ரேலிய இனத்தவருடன் ஒரளவு கலப்புண்டு அவர் தம் சமயநிலை, மொழி முதலியவற்றிற் சிலவற்றைக் கொண்டினர் என்பதும், (6) திராவிடர்கள் சுமேரியர் இனத்தவர் என்பதும் பிறவும் நன்கு அறியலாம்.


  1. ‘Indus valley people lived for a considerable time in India. Not only do their exceptionally well built cities bear witness to this fact but fresh corroboration is also to be found in various aspects of their religion, which included tree and animal-worship and the use of phallic symbols, features, which do not appear in the contemporary civilizations to the west”, - Dr.Mackay’s ‘The Indus Civilization’, pp. 13, 14.
  2. இது துணிந்து கூறுவதற்கில்லை. திராவிடர் லெமூரியாக கண்டத்திலிருந்து இந்தியா, சுமேரியா முதலிய இடங்களிற் பரவினர் என்பது ஒருசார் ஆராய்ச்சியாளர் கூற்று. ஆதலின், திராவிடர் ‘இவ்விடத்திலிருந்து வந்தனர்’ என்று உறுதியாகக் கூறுவதற்கில்லை. இக்கூற்று ஆய்வுக்குரியது.