பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மொஹெஞ்சொ - தரோ


செமிட்டியரைப்பற்றியும் பல செய்திகள் வெளிப்போந்தன. [1]அங்குக் கிடைத்த எழுத்துக் குறிகளைச் சோதித்துப் பார்த்த எட்வர்ட் ஹிங்க்ஸ் (Edward Hicks) என்பவர், ‘பாபிலோனியர் கையாண்ட எழுத்துக்கள் அவர்களுடையன அல்ல’ என்று கருதினார். அவ்வெழுத்துக்களை நன்கு ஆராய்ந்த ஆப்பர்ட் என்பார். ‘இவை சுமேரியருடையன’ என்று முடிவு கூறினார். மேலும் ஆராய்ச்சி நடத்தியதில், பாபிலோனியரும் அசிரியரும் தங்கட்கு முற்பட்ட சுமேரியரிடமிருந்தே கலை, மதம், மொழி முதலிய எல்லாம் பெற்றனர் என்பதற்கு உரிய சான்றுகள் கிடைத்தன. 1855 இல் டெய்லர் என்பவர் நடத்திய ஆராய்ச்சியில் பாபிலோனியாவில் எரிது (Eridu) உர் (Ur) என்னும் சுமேரிய நகரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. 1874 இல் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சியின் பிறகே சுமேரியருடைய வரலாறு, கலைகள், மொழி முதலியன நன்கு தெரிந்தன. கி.மு.2800 ஆண்டுகட்கு முற்பட்ட சிற்பங்களும் மிகப் பழைய சாசனங்களும் கண்டெடுக்கப்பட்டன. பிறகு ஜெர்மானியர் பல மண்மேடுகளைத் தோண்டி ஆராய்ச்சி நடத்தினர். அசுர் நகரம் தோண்டப்பட்டுச் சுமேரியரைப் பற்றிய பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. பின்னர் அமெரிக்கர் சில மண்மேடுகளை ஆராயத் தொடங்கினர். 1889இல் நிப்பூர் தோண்டப்பட்டது. அதில் காற்றுக் கடவுள் கோவிலும், பல காலங்களைச் சேர்ந்த 50,000 சாசனங்களும் கிடைத்தன. சென்ற ஐரோப்பியப் போருக்குப் பின்னர் எரிது, உர், கிஷ், தல், அஸ்மர், கப்ஜே முதலிய சுமேரியர் நகரங்கள் ஆராய்ச்சிக்கு உட்பட்டன. அவ்விடங்களிலிருந்த மண்மேடுகளில் பல அடுக்குகளையுடைய கட்டிடங்கள் காணப்பட்டன. கி.மு.3000க்கு முற்பட்ட நாகரிகத்தை உடைய சுமேரியருடைய சிறப்புகள் கண்டறியப்பட்டன.

சுமேரியர் சித்திர எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்தனர். நீண்ட உருண்டை முத்திரைகளை உபயோகித்தனர்; கட்டிடங்களுக்கு


  1. І.А. H. Layard’s A Papular Account of Discoveries at Ninaveh.