பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மொஹெஞ்சொ - தரோ


மாதோ சருப் வாட்ஸ் என்னும் பேரறிஞர் இந்நகர ஆராய்ச்சியில் பேருக்கம் காட்டினார்; பல பொருள்களைப் பற்றிய வியத்தகு செய்திகளை இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சி நிலைய வெளியீடுகளில் வெளியிட்டார்; இறுதியில் ஹர்ப்பாவைப்பற்றிய ஆராய்ச்சியை இரண்டு பகுதிகளாக அண்மையில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகள் பின் வரும் பகுதிகளில் ஆங்காங்குக் கூறப்படும் ஆதலின், இங்குக் கூறாது விடப்பட்டன.

மொஹெஞ்சொ-தரோ (1922-23இல் நடைபெற்ற ஆராய்ச்சி)

இது மண் மூடுபட்டு இருந்த ஆரியர் வருவதற்கு முன்பு மிக உயர்ந்த நாகரிகத்துடன் இருந்த நகரமாகும். இஃது இன்று சிந்து ஆற்றின் மேற்கே இருக்கின்றது. இதனைச் சுற்றிலும் வேறு சில மண்மேடுகள் இருக்கின்றன. அவற்றுள் 2100 செ. மீ. உயரமுள்ள ஒன்றன்மீது பெளத்த ஸ்தூபி ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. அதனைக் கண்ட பானர்ஜி என்னும் ஆராய்ச்சியாளர். அதன் சுற்றுப்புறத்தைத் தோண்டும் வேலையில் ஈடுபட்டார். அம்மண் மேட்டினுள் நாற்கோணமுள்ள முற்றம் ஒன்றைக் கண்டார்; அம்முற்றத்தைச் சூழ் இருந்த முப்பது சிற்றறைகளைக் கண்டார். அவற்றுள் ஒர் அறையில் அக்கட்டிடத்தின் காலத்தைக் குறிப்பனபோலச் சில நாணயங்கள் இருந்தன. அவை குஷான் அரசர்காலத்தவை வாசுதேவமன்னனால் வெளியிடப்பட்டவை. பானர்ஜி மிக்க மகிழ்ச்சி அடைந்தவராய் மேலும் மண்மேட்டை அகழ்ந்தார். அம்மேடு தரைமட்ட அளவுக்கு வெட்டப்பட்ட போது, அங்கொரு சித்திர எழுத்துக்களைக்கொண்ட முத்திரை கிடைத்தது. அவர்மேலும் நிலத்தை அகழ்ந்த போது, இரண்டு முத்திரைகளைக் கண்டெடுத்தார்.

இம்மூன்று முத்திரைகளும் ஆராய்ச்சிக் கூடத்தை அடைந்தன. அதே காலத்தில் ஹரப்பாவில் ஆராய்ச்சி நிகழ்த்திய இராய் பகதூர் தயாராம் ஸஹ்னி என்னும் பேரறிஞர்,