பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்

27


சான்ஹு-தரோவில் கிடைத்த் பொருள்கள், மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தவற்றுக்கு ஒப்பாகவே இருக்கின்றன். அங்குக் கிடைத்த தாழிகளில் தீட்டப்பெற்ற ஒவியங்கள் மொஹெஞ்சொ-தரோ ஒவியங்களை ஒத்துக் காணப்படுகின்றன. ஒன்றில் மரமும் மற்றொன்றில் வெள்ளாடும் பொறிக்கப்பட்டுள்ள இரண்டு முத்திரைகள் அங்குக் கிடைத்தன. எனவே, சான்ஹ-தரோவை மேலும் நன்கு அகழ்ந்து ஆராய்ச்சி நிகழ்த்தினால், பண்டைக் காலத்திற்கு உரிய பொருள்கள் பல கிடைத்தல் கூடும். ஆயின், அப்புதிய இடத்தை அகழ்ந்து பார்க்கும் உரிமையை இந்திய அரசாங்கத்தாரிடமிருந்து, ஒர் அமெரிக்க ஆராய்ச்சிக் கழகத்தினர் பெற்றுவிட்டனர். இனி அக்கழகத்தினர். தம் பொருட்செலவில் அவ்விடத்து ஆராய்ச்சிப்பணி ஆற்றுவர் போலும்!

லொஹுஞ்-சொ-தரோ

சிந்து ஆற்றின் மேற்குக் கரைவெளியில், பியாரோகோதத்திற்கு அருகில் மொஹெஞ்சொ-தரோவுக்கு 96 கி.மீ. தெற்கில் ஒரு பெரிய மண்மேடு இருப்பதாகத் தெரிந்தது. அவ்விடம் இருந்த மண்மேடு 27,000 செ.மீ.நீளமும் 18000 செ.மீ. அகலமும் 690 செ.மீ. உயரமும் உடையது. அம்மண்மேட்டின் ஒரு பகுதியைத் தரைமட்டம் வரையில் தோண்டி அதற்குக் கீழும் 330 செ.மீ. வரை அறிஞர் மஜூம்தார் சோதனை புரிந்தார். அங்குச் செங்கற்களாலாகிய - கட்டிடங்கள் காணப்பட்டன. அவற்றிற்கு அடியில் அவற்றுக்கும் முற்பட்ட காலத்துச்சின்னங்கள் பல காணப்பட்டன. அவற்றுள் சிறந்தவை மட்பாண்டங்களாகும். இவை செந்நிறம் பூசப்பட்டவை. அச்செந்நிறத்தின் மீது கறுப்பு வண்ணத்தில் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.இத்தகைய மட்பாண்டங்கள் பல மொஹெஞ்சொ-தரோவிலும் கிடிைத் துள்ளமை கவனித்தற்குரியது, இப்பாண்டங்கட்கு மேற்புறத்தில் காணப்பட்ட வேறுவகைப் பாண்டங்கள் பிற்கால நாகரிகத்தைச் சேர்ந்தவை ஆகும் என்று மஜும்தார் கருதுகின்றார். ஆகவே, இப்