பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மொஹெஞ்சொ - தரோ


பகுதியிலும் இரு வேறுபட்ட நாகரிகம் இருந்திருத்தல் வேண்டும் என்பது கருதத்தக்கது. பிற பொருள்களுள் குறிப்பிடத் தக்கவை களிமண்ணாலாய எருதுப் படிவங்கள் ஆகும். அவற்றுள் ஒன்று கழுத்தில் துளையிட்ப்பட்டுள்ளது. முக்கோண வடிவில் அமைந்த களிமண் அப்பங்கள், உயர்ந்த களிமண்ணாலாய வளையல்கள் முதலியன கண்டெடுக்கப்பட்டன. அங்குக் கிடைத்த பலவகை மணிகளுள் மாக்கல் மணிகள் பலவாகும் அவை தட்டை வடிவத்தில் அமைந்துள்ளன. அம்மணிகள் மொஹெஞ்சொ-தரோவிலும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. மாக்கல்லாலான முத்திரை ஒன்றும் கிடைத்தது. அதன்மீதுள்ள எழுத்துக் குறிகள் மொஹெஞ்சொ-தரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் உள்ள எழுத்துக் குறிகளையே ஒத்துள்ளமை வியப்பூட்டுவதாகும்.

இவ்வண்ணம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மண்மேடு இருந்த இடம் மொஹாஞ்சொ-தரோ என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. அந்த இடங்களில் ஆராய்ச்சித் தொண்டாற்றிய அறிஞர் மஜும்தார் பிறிதோர் உண்மையையும் வெளிப்படுத்தி யுள்ளார். அஃதாவது, ‘அக்கால மக்கள், குன்றுகளின் அடிப் புறங்கள் வசிப்பதற்கு ஏற்ற தட்ப வெப்ப நிலையுடன் இருக்கின்றன என்பதையும் தற்காப்பு அரண் உடையவைகளாக இருக்கின்றன என்பதையும் நன்கு அறிந்திருந்தனர்’ என்பதே ஆகும்.[1]

இது சிந்து மண்டிலத்தில் ‘ஷஹடட்பூர்’ என்னும் ஊருக்கு வடமேற்கில் 6.5 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய மண்மேடாகும். இதன் அருகில் 0.5 கி. மீ. தொலைவில் வேறொரு மண்மேடு இருக்கின்றது. மொஹெஞ்சொ-தரோ மண்மேட்டின் மீது இருக்கும் ஸ்தூபம் போன்ற பெளத்த ஸ்தூபி ஒன்று இங்கும் இருக்கின்றது. இந்த ஸ்தூபம் உள்ள மண்மேட்டைச் சுற்றிலும் சிறிய மண்மேடுகள் உள்ளன. இவை அனைத்தும் கொண்ட


  1. Annual Reports of the Archaeological Survey of India’ - (1930 - 1934), Part I, pp. 99-93.