பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்

29


பெரிய மண் மேடேதகஞ்சொதரோ என்பது. இதன் பரப்பு ஐந்து ஏக்கர் ஆகும். மண்மேட்டின் உயரம் 600 செ.மீ. முதல் 1200 செ.மீ. ஆகும். இங்குச் சுட்ட செங்கற்கள் 10 செ.மீ. கனமுடையனவாகக் காணப்படுகின்றன. இங்குச் சித்திரம் தீட்டப்பெறாத மட்பாண்டங்களே மிகுதியாகக் கிடைக்கின்றன. இம்மட் பாண்டச் சிதைவுகளும் செங்கற்களுமே இப்பகுதியில் பெருவாரி யாகக் கிடைக்கின்றன. சில் செங்கற்கள் 28 செ.மீ. சதுரமுடையன; 5.5 செ. மீ. கனமுடையன. உயர்தரமணிகள் இரண்டு கிடைத்தன. இந்த இடத்தை மேலும் அகழ்ந்து ஆராய்ச்சி செய்யவில்லை. சித்திரம் தீட்டப் பெறாத மட்பாண்டங்கள் இருத்தலைக் காணின், இங்கு மிகப் பழைய நகரம் இருந்திருத்தல் வேண்டும் என்பது வெளியாகிறது.[1]

சக் பூர்பானி ஸியால்

ஹரப்பாவுக்குத் தென்கிழக்கே ஏறக்குறைய 20.5 கி. மீ. தொலைவில் பியாஸ் ஆற்றின் உலர்ந்த பழைய படுக்கை ஒன்றில் காணப்பட்ட மண்மேடுகளை அறிஞர் வாட்ஸ் என்பவர் அகழ்ந்து பார்த்தார். அந்த இடம் ‘சர் பூர்பானிஸியால்’ என்று வழங்கப் படுகிறது. அங்கு ஏராளமான உடைந்த மட்பாண்ட ஒடுகளும், செங்கற் கட்டிகளும், அடிப்புறம் குவிந்துள்ள நீர் அருந்தும் ஏனங்களும், நிறந் தீட்டப்பட்ட பாண்டச் சிதைவுகளும், உருட்டு வடிவான ஏனங்களும், மோதிரங்களும், பீடங்கள் மீது வைக்கும் கலன்களும், முட்டை வடிவக் கோப்பைகளும், தாம்பாளங்களும், வளையல்களும், குரங்கு அணில், கொம்புடைய எருது, கல்லால் கண்கள் வைக்கப்பெற்ற மயில் ஆகிய படிவங்களும், தலையற்ற பெண் படிவங்களும், காதணிகளுடன் கூடிய சிற்றுருக்களும், இருந்தன. அங்கு மேலும் பல நிறங்களுடைய சுட்ட களிமண் மணிகள், வளையல்கள், மாக்கல்லால் செய்யப்பட்ட மணிகள்,


  1. Annual Report of the Archaeological Survey of India’ - (1929 - 1930) P. 117.