பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்

31


பட்டது. அவ்விடம் முழுவதும் தோண்டி எடுக்கப்படின், வேறு பல பொருள்களும் பிறவும் அறிதல் கூடுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.[1]

பாண்டி வாஹி

இப்பெயருடைய சிறிய கிராமம் லர்க்கானாக்கோட்டத்தில் கீர்தர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளது. இதன் அருகில் இதன் பெயரையே கொண்டி மண்மேடு ஒன்று காணப்படுகிறது. அது 13500 செ. மீ. நீளமும் 7500 செ. மீ. அகலமும் 630 செ. மீ. உயரமும் உடையது. எனினும், அதன் பழைய அளவு மிகப் பெரியதாக இருந்திருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அம்மண் மேட்டில் குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஆராய்ச்சி நடைபெற்றது. மேற்கூறப்பட்ட இடங்களில் கிடைத்த மட்பாண்டப் பொருள்களும் பிறவும் அவ்விடத்தும் கிடைத்தன. அம்மண்மேடும் முன் சொல்லப்பட்டமேடுகளைப்போலவே முழு ஆராய்ச்சிக்கு உட்படுமாயின், பல உண்மைகள் வெளியாகும்.[2]

அம்ரி

அம்ரி என்பது கராச்சிக் கோட்டத்தில் வடக்கு எல்லையில் சிந்து ஆற்றின் கரையில் உள்ள சிற்றுார் ஆகும். சிந்து, ஆற்றில் பிரயாணம் செய்த பர்னஸ் என்னும் மேனாட்டு அறிஞர் சுமார் 100 ஆண்டுகட்கு முன்னரே, இவ்விடத்தைப்பற்றிக் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “அம்ரி என்னும் பெயருடன் இன்று விளங்கும் சிற்றுர், ஒரு காலத்தில் மிகப் பெரிய நகரமாக இருந்திருத்தல் வேண்டும். இது சிந்துவின் வெள்ளத்திற்கு அடிக்கடி இரையாகி மறைந்திருத்தல் வேண்டும். எனினும், இன்றுள்ள கிராமத்தினருகில் 1200 செ.மீ. உயரத்தில் மண்


  1. ‘Annual Reports of the A.S. of India’, (1930-1934) Part I. pp. 97, 98 and NG. Majumdar’s ‘Explorations in Sind’, p. 89.
  2. Ibid, pp. 104, 105.