பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மொஹெஞ்சொ - தரோ


மேடு ஒன்று காணப்படுகிறது. அதனைத் தோண்டிப் பார்ப்பின் பல உண்மைகள் வெளிப்படல் கூடும்”.

இவ்வறிஞர் ஒரு நூறு ஆண்டுகட்கு முன் இங்ஙனம் எழுதிச் சென்றமை இன்று உண்மை ஆகிவிட்டது. இவர் ஆப்பி மண்மேடு, கிராமத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது. அதன் அருகில் வேறு பல மண் மேடுகளும் உள்ளன. அவற்றுள் ஒன்றில் உலர்ந்த செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடச் படுகின்றன. சில மண்மேடுகளில் சுட்ட கட்டிடச்சிதைவுகள் காணப்படுகின்றன.அவ்விடத்தை ஆராய்ச்சி செய்யச் சென்ற மஜும்தார் ஒரு மண்மேட்டில் 1500 செ. மீ. நீளமும் 360 செ. மீ. அகலமும் 150 செ. மீ ஆழமும் உள்ள குழி சிதைவுகள் காணப் செங்கற்களால் ஆகிய ஒன்றைத் தோண்டிப் பார்த்தார். மூன்று கற்சுவர்களின் பகுதிகள் தென்பட்டன. ஆராய்ச்சியா ளர் அச்சுவர் களின் அடிமட்டம் வரை தோண்டவே, அவ்விடம் தரைமட்டத்தினும் கீழ்நோக்கிச் சென்றது: அக்குழியிலிருந்து 253 பொருள்கள் கிடைத்தன. அவற்றுள் சித்திரம் தீட்டப்பட்ட விளையாட்டு வண்டிகள், மட் பாண்டங்கள், பதுமைகள், வளையல் துண்டுகள், மணிகள், மண் அப்பங்கள் முதலியன சிறப்பித்துக்கூறத் தகுவன. மட்பாண்டங்கள் 214 கிடைத்துள்ளன.இவை பலவகை நிறங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்நிறங்களுக்குமேல் மீன் செதில், வட்ட மலர், மாவிலை, அரசிலை, அலகில் மலருடன் விளங்கும் மயில், சதுரங்கப்பலகை, முட்டை, பட்டைகள், பட்டைகளுக்குள் முக்கோண வடிவம் முதலிய ஓவியங்கள் பற்பல விதமாகத் தீட்டப்பட்டுள்ளன. பொதுவாக, மட்பாண்டங்கள் செந்நிறமே பூசப்பட்டுள்ளன. இவை மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்தவற்றை ஒத்திருக்கின்றன.

பிற பொருள்களில் நீண்டு உருண்ட பச்சை மணிகளும், குமிழ்போன்ற மணிகளும் குறிப்பிடத் தக்கவை. இம்மணிகள் மீது வளையங்கள் வரையப்பட்டுள்ளன. வளையல் துண்டுகள் 25 கிடைத்தன. இவற்றுட் சிலவற்றில் செந்நிறப் புள்ளிகள்