பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்

33


காணப்படுகின்றன.பதுமைகளுள் சிதைந்த் தேர்கள் 12 கிடைத்தன; எருதுப்பதுமைகள் 8 கிடைத்தன. ஒர் எருதுத் தலை கழுத்தில் துளையுடன் காணப்பட்டது. இத்தலைக்குரிய உடல் காணப்பட வில்லை. இவை தவிர, 10 மண் அப்பங்கள் கிடைத்திருக்கின்றன. இங்குக் கிடைத்த பொருள்கள் மொஹெஞ்சொ-தரோ நாகரிகத்துடன் பெரிதும் ஒத்துக் காணப்படுகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.[1]

கோட்லா நிஹாங் கான்

‘சிவாலிக் மலைக்கு அடிப்புறம் உள்ள ‘அம்பாலா’ கோட்டத்தில் ‘ருபார்’ நகருக்கு அருகில், சிந்து ஆற்றின் கிளையாகிய ஸ்ட்லெஜ் ஆற்றின் படுக்கையில் இருக்கும் கோட்லா நிஹாங் கான் என்னும் சிற்றுாரைச் சார்ந்துள்ள மண்மேட்டை அறிஞர் வாட்ஸ் அகழ்ந்து ஆராய்ச்சி நிகழ்த்தினார். அம்மேடு 12 ஏக்கர் பரப்புள்ளது; 360 செ. மீ. முதல் 900 செ.மீ. வரை உயரமுடையது. அங்கு அவர் கண்டெடுத்த பொருள்கள் பலவற்றை, ஹரப்பாவிலும் மொஹெஞ்சொ-தரோவிலும் பிற இடங்களிலும் கிடைத்த பொருள்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவை பெரிதும் ஒன்றுபட்ட ஒர்ே நாகரிகத்திற்கு உரியவையாக இருந்தன. கோட்லா நிஹாங் கானில் கிடைத்த களி மண்ணாலாய செங்கற்கள், களிமண் கொண்டு செய்யப்பட்ட மணிகள், அப்பங்கள், மோதிரங்கள், சுரைக்குடுக்கை போன்ற நீர்க்குவளைகள், தாம்பாளங்கள், சாடிகள் வைக்கும் பீடங்கள், மட் பாண்டங்கள், இவற்றின் உடைந்த பகுதிகள், வளையல் துண்டுகள், சிறு நிறைக் கற்கள், முட்டை வடிவத்தில் இருந்த நீர் அருந்தும் குவளைகள்


  1. Annual Report of the Achaeological Survey of India (1929-1930), pp. 113. 116 N.G.Majumdar’s ‘Explorations in Sind’, pp. 24-28.