பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மொஹெஞ்சொ - தரோ


முதலியன சிந்து வெளிமக்கள் நாகரிகத்தையே ஒருவாறு ஒப்பனவாக இருக்கின்றன.[1]

நூற்றுக்கு மேற்பட்ட மண்மேடுகள்

சிந்து ஆற்றின் கிழக்குக் கரைமீதுள்ள ‘கைர்ப்பூர்’ சமத்தானத்திலும், கத்தியவாரிலுள்ள ‘லிம்ப்டி’ சமத்தானத்தைச் சேர்ந்த, ‘அரங்பூர்’ என்னும் இடத்திலும், லர்க்கானாவுக்கு அருகில் உள்ள ‘ஜுகார்’ என்னும் இடத்திலும், காஜிஷா என்னும் இடத்திலும் இவ்வகை ஆராய்ச்சிப் பணி நடைபெற்றது. இந்நான்கு இடங்களிலும் நிகழ்த்திய ஆராய்ச்சித் தொண்டின் பலனாகக் கிடைத்த பண்டைப் பொருள்களை நோக்கின், இவற்றிற்கும் மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிடைத்த பொருள்களுக்கும், இடையே சிறு வேறுபாடும் இல்லை எனலாம். இவை முழுவதும் சிந்து வெளி நாகரிகத்துடன் இயைந்து காணப்படுகின்றன.

சிந்து வெளியில் மட்டும் ஒரு நூற்றுக்கு மேற்பட்ட மண்மேடுகளும் பழைய சரித்திர காலத்திற்குரிய இடங்களும் இருக்கின்றன.இவற்றை ஆராய்ச்சி செய்து பார்ப்பின், இன்றுள்ள இந்திய வரலாறு அற்புத மாறுதலை அடையும் என்பதில் ஐயமில்லை.




  1. ‘Annual Report of the Archaeological Survey of India’ (1929-1980) pp. 131-132. M.S.Vates’s ‘Excavations at Harrappa’, Vol.I. pp.476-477.