பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. பிற மண்டிலங்களின் புதை பொருள்கள்

ஆராய்ச்சி இடங்களிற் பாயும் ஆறுகள்

இந்தியாவில் ஆராய்ச்சிக்குரிய பிற இடங்களை அறியுமுன், அவ்விடங்கள் அமைந்துள்ள ஆற்று வெளிகளைப் பற்றி அறிதல் இன்றியமையாததாகும். ஆதலின், சிந்து நீங்கலாகவுள்ள கங்கை, நருமதை,கோதாவரி,கிருஷ்ணை, காவிரி, தாமிரபரணி, பெரியாறு என்னும் யாறுகளைப் பற்றியும் அவை பாயும் இடங்களைப் பற்றியும் ஈண்டு முதலில் குறிப்பிடுவோம்.

கங்கை

இமயமலையின் தென் பள்ளத்தாக்குகளிலிருந்து புறப்படும் ‘பாகீரதி அலகண்டா’ என்னும் இரண்டு சிற்றாறுகளின் கலப்பே கங்கை யாறு ஆகும். இஃது அல்லகபாதை அடையும்வரை மிக்க நீரோட்டம் உடையதன்று. அல்லகபாதில் மிகப் பெரிய யாறாகிய யமுனை என்பது கங்கையிற் கலக்கின்றது. அங்கிருந்து கங்கையாறு ஐக்கிய மண்டிலத்திலும் வங்காள மண்டிலத்திலும் பாய்ந்து வங்கக்கடலிற் கலக்கின்றது. இதன் மொத்த நீளம் 2490 கி.மீ. ஆகும். இதில் கலப்புறும் யாறுகள்-சர்தா, இராம் கங்கா, கும்டி, கோக்ரா, சோனை, கண்டக்குசி என்பன. இதன் சங்கமுகத் துறையில் உள்ள புகர் நில வெளி 128 முதல் 352 கி. மீ. அகலமுடையது. இதன் பாய்ச்சலைப் பெறும் இடம் 39,000 சதுரக் கற்கள் ஆகும். இது மிகப் பழைய கால முதலே சிறப்புடையாறாகக் கருதப்பட்டு வருகின்றது. இது பாய்கின்ற நிலம் கங்கை வெளி எனப்படும். இதன் கரையோரத்தில் இருந்த பண்டை நகரங்கள் (வட) மதுரை, கெளசாம்பி, பிரயாகை, வாரணாசி (காசி) முதலியன.

சிந்து வெளியிற் குடியேறிய ஆரியர் நாளடைவில் கங்கையமுனை யாறுகட்கு இடையில் உள்ள நிலப்பகுதியிலும் குடியேறினர். அங்கனம் அவர்கள் குடியேறும் பொழுது அங்கு