பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மொஹெஞ்சொ - தரோ


வாழ்ந்திருந்த பண்டை மக்களோடு போரிட்டனர். “கிருஷ்ணன் என்பவனைத் தலைவனாகக் கொண்ட ‘கிருஷ்ணர்’ (கறுப்பர்) யமுனைக் கரையில் வாழ்ந்திருந்தனர். அவருள் ஐம்பது ஆயிரம் பேரை ஆரியர் தலைவனான இந்திரன் கொன்றான்”[1] என்று ரிக்வேதம் கூறுவதிலிருந்து, கங்கை வெளியிற் பல இடங்களில் பண்டை மக்கள் நகரங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்திருந்தனர்[2] என்னும் உண்மையை உணரலாம்.

நருமதை-தபதி யாறுகள்

இவை வட இந்தியாவிற்குத் தென் எல்லையாகவுள்ள விந்திய-சாத்பூரா மலைத் தொடர்களிலிருந்து புறப்பட்டு மேற்கு நோக்கிச் சென்று அரபிக் கடலில் கலக்கின்றன. நடு இந்தியாவின் தெற்கில் உள்ள மலைக் கோட்டங்களும், நடு மண்டிலங்களின் வடக்கில் உள்ள மலைக்கோட்டங்களும் முறையே விந்தியசாத்பூரா மலை நாடுகளிற் கலந்துள்ளன. இவ்விரு மலைத் தொடர்கட்கும் இடையே சிறந்த யாறாகிய தருமதை ஒடிக்கொண்டிருக்கிறது.இந்த இருமலைத் தொடர்களைச் சார்ந்த நாடுகளில், பல வகைப்பட்ட மலைவாணர் வாழ்கின்றனர். இம்மலை நாடுகளில், அடர்ந்த காடுகள் மிக்குள்ளன இவற்றைக் கடந்துபோதல் இயலாத செயல், போக விரும்புபவர், கரையோரங்கள் வழியாகவும் கடல் வழியாகவும் போகலாம். இம்மலைப் பகுதிகளாற்றான் வட இந்திய வரலாறு வேறாகவும் தென் இந்திய வரலாறு வேறாகவும் இருக்கின்றன.

தென்னாடு

விந்திய-சாத்பூரா மலைத்தொடர்கட்குத் தென்பாற்பட்ட நிலப்பகுதி தென்னாடு அல்லது ‘டெக்கான்’ எனப்படும். இம்


  1. P.T.S.Iyengar’s ‘Stone Age in India’, p.51
  2. இப்பண்டை மக்கள் யாவர் என்பதை இறுதிப் பகுதியில் ஆராய்வோம்.