பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற மண்டலங்களின் புதைபொருள்கள்

41


உட்படப் பல சிறு செம்புக் கருவிகள் கிடைத்தன. ஆராய்ச்சியாளர் இவற்றை மிகவும் முக்கியமானவை என்று கருதுகின்றனர். சோட்டா நாகபுரியின் தென்பாகத்தில் செம்புச் சுரங்கள் இருப்பதால், அந்த வெளியில் மேலும் பல இடங்களில் பண்டைக் காலப் பொருள்களோ அன்றிச் செம்புச் சுரங்கங்களோ இருத்தல் வேண்டும் என்று அறிஞர் நினைக்கின்றனர். இதே மண்டிலத்தில் பிறிதோரிடத்தில் 162 வெள்ளித் தாம்பாளங்கள் அகப்பட்டன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட செம்புக்காலத்திற்கு உரிய பொருள்களுள் இவைதாம் மிகச் சிறந்தவை என்று அறிஞர் கருதுகின்றனர். ஜப்பல்பூரில் வெண்கலத்தால் செய்யப்பட்ட கல்தச்சர் உளி ஒன்று கிடைத்தது. இவ்வுளி நீண்டு வளைந்ததாய்க் கூரிய முனை உடையதாய் இருக்கிறது.[1]

ஒரிஸ்ஸாவில் இரட்டைக் கோடரிகள்

ஒரிஸ்ஸா (உரியா) மண்டிலத்தைச் சேர்ந்த ‘மயூர்ப்பஞ்ச்’, சமத்தானத்தில் இருபுறமும் கூர்மை உடைய செம்பாலாகிய இரட்டைக் கோடரிகள் கிடைத்தன. இந்த மாகாணத்தில் கந்த கிரி (Khanda Giri) என்னும் மலைப் பிரதேசத்தில் அழகிய வேலைப்பாடமைந்த மலைக் குகைகள் இருக்கின்றன. இந்த இடம் ஆராய்ச்சிக்கு மிகவும் உரியதாகும்.[2] வங்காளத்திலும் செம்பாலான கருவிகள் சில கண்டெடுக்கப் பட்டன. இப்பகுதிகளில் விரிவான முறையில் ஆராய்ச்சி நடைபெறின் வரலாறு எழுதத் தொடங்கப்பட்ட காலத்திற்கும் அதற்கு முன்னைய காலத்திற்கும் உள்ள உறவுபற்றிய துணுக்கங்கள் பலவும், செம்புக் காலத்தில் நம் நாட்டின் எவ்வெப் பகுதிகளில் மக்கள் எவ்வெந்நிலையில் இருந்தனர் என்பதும், அதற்குப்பிற்


  1. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the Indus Valley’, pp.54, 55.
  2. M.M.Ganguly’s ‘Orissa and her Remains’.