பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மொஹெஞ்சொ - தரோ

பட்ட கால விவரங்களும் கிடைக்கப்பெறலாம் என்பது அறிஞர்கள் கருத்தாகும். -

டெக்கான்

இந்திய நாட்டின் வடபுறத்துச் செய்தி இவ்வண்ணம் இருப்பத் தென்புறத்தைக் கவனிப்போம்; நருமதை, தபதி ஆகிய ஆறுகள் பாயும் இடங்கள் பயன் அற்றவையா? செய்ப்பூர், பிக்கானீர், ஜெய்ஸால்மர், காம்பே வளைகுடா, புரோச் ஆகிய இடங்களைச் சூழ்ந்துள்ள இடங்கள் அறிஞர் கவனத்தை ஈர்க்கவில்லையோ? ‘இல்லை’ என்று கூறிவிடல் முடியாது. இந்த இடங்களிலும், சிந்து வெளி நாகரிகம் பரவி இருந்தது என்பதற்குச் சான்றுகள் பல கிடைத்தல் கூடும் அறிஞர் இதுவரை இப்பகுதி களில் தீவிரமாக ஆராய்ச்சி நிகழ்த்தவில்லை. எனினும், ஈண்டும் சிந்து வெளி நாகரிகம் பரவித்தான் இருந்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. சிந்து ஆற்றுப் பாங்கில் வாழ்ந்த மக்கள் கனி பொருள்களுக்காகவும் வாணிபம் பற்றியும் இந்தப் பகுதிகளில் வாழ்ந்திருந்த மக்களுடன் கூட்டுறவு பெற்றிருத்தல் வேண்டும். கங்கை ஆற்றுப் பள்ளத்தாக்குகளைவிட இந்தப்பகுதிகளில், இக்கருத்தை மெய்ப்பிப்பதற்கு வேண்டிய சான்றுகள் பல வெளிப்படும் என ஆராய்ச்சியாளர் நம்புகின்றனர்.அப்பண்டைக் காலச் சிவப்புமண் கற்களும், செங்கற்களும், சிவப்பு மண்ணாலாய மணிகளும், மட்பாண்டங்களும், பிற பெர்ருள்களும் கரம்பே, புரோச் ஆகிய துறைமுகப்பட்டினங்கள் மூலமாகவே, வெளிநாட்டாருக்கு அனுப்பப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து சிந்து வெளி நாகரிக் காலத்தில் இந்த பட்டினங்கள் வெளிநாட்டு வாணிபத்தின் பொருட்டுப் பெருஞ் சிறப்புப் பெற்றவையாகவே அமைந்திருத்தல் வேண்டும் என்று ஆராய்சிசியாளர் கருதுகின்றனர்.

விந்தமலைப் பகுதிகளில் புதிய கற்கால மக்கள் கையாண்ட நல்லுருவில் அமைந்துள்ள இயந்திரங்கள், கல்