பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற மண்டலங்களின் புதைபொருள்கள்

49


தாழியின் வாய் 37.5 செ.மீ. அங்குலம் குறுக்களவு உடையது; 192 செ. மீ. உயரமுடையது. அதனுள் எட்டுச் சிறு தாழிகளும், உணவுண்ணும் கலன்களும், நீரருந்தும் கலன்களும், சாடிகளும், சட்டிகளும் இருந்தன. அவையாவும் கருப்புக் களிமண்ணாலும் சிவப்புக் களிமண்ணாலும் செய்யப்பட்டவை. அத்தாழியின் மேற்புறத்தில் 75 செ.மீ நீளமுள்ள வாள் ஒன்று கிடைத்தது.அதன் கைப்பிடி அழிந்தது போலும்! அத்தாழிக்குள் இரண்டு இரும்பு ஈட்டித் தலைகள் கிடந்தன. பிறிதோர் இடத்தில் வெண்கல விளக்கொன்று கண்டெடுக்க்ப்பட்டது. இத்தகைய பழங்காலப் புதைப்பொருள்களைப்பற்றிய விவரங்கள் ஆராய்ச்சியாளரால் அவ்வப்பொழுது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

டெக்கான் பகுதி தனித்திருந்ததா?

பழைய புதிய கற்காலங்களிலும் இவற்றை அடுத்துத் தோன்றிய இரும்புக் காலத்திலும் கிடைத்த பொருள்களைப் பிற நாடுகளிற் கிடைத்த பொருள்களோடு வைத்து ஆராய்கையில், டெக்கான் பகுதி வெளி நாடுகளோடு தொடர்புற்று இருந்தது என்னும் பேருண்மையை உணரலாகும்: (1) பல்லாவரத்தில் அகப் பட்ட மனித உருவம் இராக்கில் உள்ள ‘பாக்தாத்’ நகரில் கண்டெடுக்கப்பெற்ற உருவங்களை ஒத்துள்ளது கவனித்தற்குரியது. (2)கால் கொண்ட மட்பாண்டப் பொருள்கள் பல ஹென்றிக் ஷ்லீமன் என்பாரால் தோண்டி எடுக்கப்பெற்ற ‘ட்ராய்’ நகரத்தில் கிடைத்த மட்பாண்டப் பொருள்களை ஒத்துள்ளன. (3) மைசூர்ப் பகுதியில் கண்டு எடுக்கப்பெற்ற ‘ஸ்வஸ்திகா’ வடிவில் அமைந்த பொருள், ‘டராய்’ நகரில் அகப்பட்ட ஸ்வஸ்திகள் வடிவத்தைப் பெரிதும் ஒத்துள்ளது.[1] (4) ‘செட்டிபாளையத்திற் கிடைத்த மான் அல்லது ஆடு நிற்பதாக உடைய கோப்பை மூடி ஒன்று பாரசீகத்தில்லூரிஸ்தானில்


  1. P.T.S.Iyengar’s ‘Stone age in India’, P43 இதே ‘ஸ்வஸ்திகா’ வடிவம் மைசூரிலும் திருநெல்வேலியிலும் கிடைத்துள்ள செம்பு நாணயங்களிலும் காணப்படுகின்றன.