பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மொஹெஞ்சொ - தரோ


நற்காற்று நுகர வசதி உண்டாகல் இயல்பே. இந்நோக்கம் பற்றியே சிறிய தெருக்கள் பெரிய தெருக்களில் வந்து கலக்குமாறு செய்யப்பட்டுள்ளன. காற்றோட்டம் கருதி இங்ஙனம் தெருக்களை அமைத்துள்ள முறை, உயரிய நாகரிக மக்கள் எனப் போற்றப் பட்ட பாபிலோனியர் நகரங்களிலும் காணக்கூடவில்லை என்பது கவனித்தற்குரியது.

பெரிய தெருக்களைச் சிறியதெருக்கள் ஒரே நேராக வெட்டிச் சென்றுள்ளன. ஒரு பெருந்தெரு முக்கால் கல் நீளம் உடையது.இது நகர மண்மேட்டையே இரண்டாகப் பிரித்துள்ளது. இதன் அகலம் 990 செ.மீ. இது வண்டிப் போக்குவரவிற்கே இவ்வளவு அகலமாக அமைக்கப்பட்டிருத்தல்வேண்டும். இதன் இருபுறங்களிலும் மக்கள் நடந்து செல்லும் நடைப்பாதையும் அமைந்துள்ளது. இத்தெருவில் சிந்து மண்டில வண்டிகள் மூன்று ஒரே வரிசையிற் போக வசதி உண்டென்று அறிஞர் அறைகின்றனர்.இதன் இடையிடையே சிறிய தெருக்கள் பல சந்திக்கின்றன. இந்நெடுந் தெருவின் மேற்குப் புறத்தில் குறிப்பிடத்தக்க பெரிய கட்டிடங்கள் இருந்தனவாதல் வேண்டும். இதைவிடப் பெரிய தெரு ஒன்று சிறிதளவே தோண்டப்பட்டுள்ளது. அதனால் அதைப்பற்றி ஒன்றும் இப்பொழுது கூறுதற்கில்லை.540 செ.மீ அகலமுடைய தெருக்கள் சில இருக்கின்றன. 390 செ.மீ. அகலமுள்ள தெருக்கள் சில, 270 செ. மீ. அகலம் முதல் 360 செ மீ அகலம் வரை உள்ள தெருக்கள் பல. 120 செ.மீ. அகலமுடைய சந்துகள் பல இக்குறுந்தெருக்கள், நெடுந் தெருக்களையும் நடுத்தரமான தெருக்களையும் பல இடங்களில் இணைத்துள்ளன. பொதுவாகக் கூறின், எல்லாத் தெருக்களுக்கும். இணைப்பு இருக்கின்றது.

சில தெருக்கள் உடைந்த செங்கல் துண்டுகளையும் மட்பாண்டச் சிதைவுகளையும் கொட்டிக் கெட்டிப்படுத்தப் பட்டுள்ளன. பல தெருக்கள் புழுதிபடிந்துள்ளன. சிறிய தெருக்கள் பெரிய தெருக்களைவிடநன்னிலையில் அமைந்துள்ளன. பெருத்த