பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர அமைப்பும் ஆட்சி முறையும்

57


வாணிபமே இந்நிலைமைக்குக் காரணமாகும். சில சந்துகளின் முனை வீட்டுச் சுவர்கள் மீது, சுமைதூக்கிச் சென்ற விலங்குகள் உறைந்து சென்ற அடையாளங்கள் காணப்படுகின்றன. வேறு சில முனை வீட்டுச் சுவர்கள் வளைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதி ஏற்றிச் செல்லும் விலங்குகளும் வண்டிகளும் சந்தைவிட்டுத் திரும்பும்போது வீட்டுச் சுவரைப் பழுதாக்க இடமிராதன்றோ? மிக நுட்ப அறிவுடன் அமைக்கப்பட்டுள்ள இச்சுவர் அமைப்புச் சுமேரியர் நகரமான புகழ் வாய்ந்த ‘உர்’ என்பதில் அமைந்துள்ள சில முனை வீட்டுச் சுவர்களில் காணப் படுகின்றது. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த இப்பண்டை மக்கள், இவ்வளவு மதிநுட்பம் வாய்க்கப் பெற்றிருந்தனர் என்பதை எண்ண எண்ண ஆராய்ச்சியாளர் பெருவியப்புக் கொள்கின்றனர்.

கால்வாய் அமைப்பு

மொஹெஞ்சொ-தரோவில் கால்வாய் இல்லாத நெடுந் தெருவோ குறுந்தெருவோ இல்லை. கால்வாய்கள் அனைத்தும், ஒரே அளவில் வெட்டிச் சுட்டுத் தேய்த்து வழவழப் பாக்கிய செங்கற்களால் அமைந்தவை. பொதுவாக எல்லாக் கால்வாய்களும் 50 செ. மீ. ஆழமும் 22 செ. மீ அகலமும் உடையனவாக இருக்கின்றன. இக்கால்வாய்களைப் போலவே இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கழிநீர்க் கால்வாய்களும் இத்தகைய சிறந்த முறையிற் செய்யப்பட்ட செங்கற்களைக் கொண்டே கட்டப்பெற்றவை ஆகும். இவ்வீட்டு வடிகால்கள் தெருக்கால்வாயுடன் சேரும் இடங்களில், சதுர வடிவில் செங்கற்கள் கொண்டு கட்டப்பெற்ற் சிறு குழிகள் அமைந் துள்ளன. அக்குழிகள் 22 செ. மீ. சதுரமும் 45 செ. மீ. ஆழமும் உட்ையவை. அக்குழிகளில் 90 செ. மீ. உயரமுடைய தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. அத்தாழிகளின் அடியில் சிறிய துளைகள் இருக்கின்றன. வீட்டு வடிகால்கள் வழியே கழிநீருடன் குப்பை களங்கள் வந்து தாழிகளில் விழுதல் இயல்பு. தாழிகளின்