பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மொஹெஞ்சொ - தரோ


மதகுகளையுடைய பெருங் கால்வாய்கள் பொதுவான நாட்களில் கழிவு நீருக்காகப் பயன்படுவதே போன்று, வெள்ளம் வரும் காலங்களில் அவ்வெள்ள நீரை வடியச் செய்வதற்கும் பயன் பல்டனவாதல் வேண்டும் என்று அறிஞர் கூறுகின்றனர். இதுகாறும் கூறப்பெற்ற எல்லாப் பொருள்களும் அழியாமல் உறுதியாக இருத்தலைக்கொண்டு இவை எவ்வளவு உறுதியாகக் கட்டப்பெற்றுள்ளன என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பன்முறை உயர்த்தப் பெற்ற கால்வாய்கள்

மொஹெஞ்சொ-தரோ நகரத்தின் வளப்பத்திற்கும் பெருமைக்கும் காரணமாக் இருந்த சிந்து யாறே அதன். அழிவிற்கும் காரணமாக இருந்தது என்னும் உண்மை, அந்நகரம் பன்முறை திருத்தியும் உயர்த்தியும் அமைக்கப்பட்டிருப்பதிலிருந்து நன்கு புலனாகின்றது. முதலில் அந்நகரைச் சம தரையில் அமைத்த மக்கள், பின்னர்ச் சிந்துயாற்றின் வெள்ளக் கொடுமைக்கு அஞ்சி, அந்நகரத்தின் அடி மட்டத்தைச் சிறிது சிறிதாக உயர்த்திக் கொண்டே போயினர்; பிறகு உயர்ந்த மேட்டில் நகரத்தைப் புதுப்பித்துக் கட்டினர். இங்ஙனம் அவர்கள் பல அடுக்குகளை கட்டினர் என்பது ஆராய்ச்சியாளர்க்கு நன்கு புலனாகிறது. அறிஞர் இதுவரை ஏழு அடுக்குகளைக் கண்டுள்ளனர். ‘ஏழாவதன் அடியிலும் பல அடுக்குகள் இருக்கின்றன. ஆனால் அங்கு நீர் ஊற்றம் ஏற்படுதலால், தோண்டிப் பார்த்தல் இயலாததாக இருக்கிறது’ என்று. கூறிவருகின்றனர்.[1] ‘முதலில் அமைக்கப் பெற்ற நகர்த்தின் காலம் ஏறக்குறைய கி.மு.2800 ஆக இருக்கலாம்; ஏழாம் முறை அமைக்கப்பெற்ற நகரத்தின் காலம் சுமார் கி.மு. 2500 ஆக இருக்கலாம்’ என்று மக்கே போன்ற ஆராய்ச்சி அறிஞர்

கருதுகின்றனர்.[2]


  1. Sir John Marshall’s Mohenjo-Daro and the Indus Civilization’. Vol. pp.102, 103.
  2. Dr.Mackay’s Further Excavations-Mohenjo-Daro, Vol.1.p.7