பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர அமைப்பும் ஆட்சி முறையும்

65


உள்ள ‘கஹுன்’ என்னும் நகரில் பன்னிரண்டாம் அரச பரம்பரையினர் ஆண்டகாலத்தேதான் இது போன்ற திட்டம் தோன்றியது. எனவே, மிக்க புகழ்படைத்த எகிப்தியரும் பாபிலோனியரும் சுமேரியரும் அப்பழங்காலத்தில் கண்டிராத நகர அமைப்பு முறையே இச் சிந்து மக்கள் கையாண்டிருந்தனர் எனின், அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டிலேயே இருந்து இம்முறைகளிற் கைதேர்ந்தவராதல் வேண்டும். சுமார் கி.மு.1500 இல் இந்தியாவுக்கு வந்த ஆரியர்க்கு முன்னரே பல நூற்றாண்டுகளாக மிக உயர்ந்த நாகரிகத்தில் திளைத்தினராதல்வேண்டும். அவர்களது நாகரிகம் சுமேரியர், ஏலத்தவர் தம் நாகரிகங்களைவிட மிகவும் உயர்ந்ததாகும்.[1]




  1. Dr. Mackays. The indus Civilization, pp. 11, 12, 22