பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டிடங்கள்

75


வேட்கோவர் விடுதிகள்

நகரத்தின் ஒரு புறம் இருந்த இல்லங்கட்கு அருகில் பல காளவாய்களும் அரை குறையாகச் சூளையிடப்பட்ட மட்டாண்டங்களும் காணப்பட்டன. அவ்விடத்தில் மட்பாண்டத் தொழிலாளர் வேட்கோவர் பெரும்பான்மையினராக வாழ்ந்தனராதல் வேண்டும். தொடக்கத்தில் அம்மக்கள் நகரத்தின் புறம்பே இருந்திருத்தல் வேண்டும் என்றும் (காளவாய்கள் நகரில் இருத்தல் சுகாதாரக் குறைவாதலின்), நாளடைவில் சனத்தொகை குறையக் குறைய நகரத்தின் ஒரு பகுதியிற் குடியேறலாயினர் என்றும் அறிஞர் கருதுகின்றனர்.[1]

வீட்டு வாயில்கள்

மொஹெஞ் சொதரோ நகரத்து இல்லங்களின் வாயில்கள் பெரும்பாலும் பெருந் தெருக்களில் வைக்கப் படாமல் குறுக்குப் பாதைகளிலேயே அமைந்துள்ளன. இம்முறையால் தெருக்கள் அழகாகக் காணப்படல் இயல்பே அன்றோ? சில பெரிய மாளிகைகளிற்றாம் அகன்றும் உயர்ந்தும் உள்ள வாயில்கள் இருக்கின்றன. ஏனைய இல்லங்களில் எல்லாம் உயரத்திலும் அகலத்திலும் குறுகலாகவுள்ள வாயில்களே அமைந்துள்ளன. பெரிய வீட்டு வாயில் 235 செ.மீ. அகலமுடையது; ஆனால் 150 செ. மீட்டருக்கு மேற்பட்ட உயரமுடையதாக இல்லை. இப்பெரிய வாயில்களை உடைய வீட்டார் பல எருதுகளையும் கோவேறு கழுதைகளையும் பிற கால்நடைகளையும் வைத்திருந்தவர் ஆதல் வேண்டும். இவர்கள் அவற்றை வீட்டு முற்றத்திலேயே கட்டியிருந்தனர். இங்கு, அவை புல்லையும் வைக்கோலையும் தின்ன அமைக்கப் பட்ட இடங்கள் இருந்த அடையாளம் தெரிகின்றது. பெரும்பாலான வீட்டு வாயில்கள் 120 செ. மீ. உயரமே உள்ளன. இவை இங்கனம் அமைந்திருத்தற்கு இரண்டு காரணங்கள்


  1. தமிழ்நாட்டு வேட்கோவர் பெரிய தாழிகளைச் செய்வதில் நிபுணர் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களால் அறிக.