பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மொஹெஞ்சொ - தரோ


இல்லம் அமைத்து வாழ்ந்தமையாற்றானோ, நம் முன்னோராய பண்டைத் தமிழ் மக்கள் மோக்ஷத்தை ‘வீடு’ என்னும் பெயரால் அழைத்தனர்? இப்பொருட் பொருத்தம் உடையனவாகவே ஹரப்பா, மொஹெஞ்சொ-தரோ என்னும் இரண்டு நகரங்களிலும் இருந்த பண்டைக் கால வீடுகள் விளக்கமுற்றிருந்தன. எகிப்தியர், சுமேரியர் முதலியோர் பிரமிட் கோபுரங்களைக் கட்டுவதிலும் சித்திர வேலைப்பாடு மிகுந்த இல்லங்களை அமைப்பதிலும் தங்கள் கருத்தைச் செலுத்தினரே அன்றிச் சிறந்த சுகாதார முறைக்கு ஏற்றவாறு இல்லங்களை அமைத்து வாழ்ந்திலர். ‘வீடு’ (இல்லம்) என்பதை வீடு (மோக்ஷம்) ஆக்கிய பெருமை ஆரியர்க்கு முற்பட்ட சிந்துப்பிரதேச மக்கட்கே உரியதாகும்.