4
மௌனப் பிள்ளையார்
கிடைத்து வந்தது. ராஜு வந்த வேளையின் அதிர்ஷ்டம் என்றே அவன் எண்ணி ஆனந்தித்தான்.
தான் கண்ணை மூடுவதற்குள் ராஜுவுக்கும் பானுவுக்கும் பிள்ளையார் முன்னிலையில் கல்யாணத்தைச் செய்துவிட அப்பாசாமி விரும்பினான். ஆனால் பிள்ளையாருடைய விருப்பம் அப்போது வேறு விதமாயிருந்தது. அந்தப் பாதை வழியாக சில தினங்களுக்கெல்லாம் ஓர் இரட்டை மாட்டு வண்டி வந்தது. அதில் ஒரு தனவந்தரும் அவர் மனைவியும் பக்கத்து நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்பாசாமியின் குடிசையை நெருங்கிய சமயம் இருட்டிவிட்டதால் திருட்டுக் கூட்டத்துக்குப் பயந்து அவர்கள் வண்டிக்காரனை" அங்கேயே நிறுத்தச் சொல்லி, இரவு அங்குத் தங்கி மறுநாள் காலை போகத் தீர்மானித்தனர்.
இராத்திரி பூராவும் அவர்கள் அப்பாசாமியின் கதையைச் சொல்லச் சொல்லிக் கேட்டார்கள். அவனுடைய கதையைக் கேட்கக் கேட்க அவர்களுக்கு ஆச்சரியமும் பரிதாபமும் மாறி மாறி ஏற்பட்டன. அப்பாசாமி தன் கதையைச் சவிஸ்தாரமாகக் கூறி முடித்துவிட்டு, "பாவம், இந்தப் பிள்ளை என்னிடம் வந்து கஷ்டப்படுகிறான். இவன் இங்கே என்ன சுகத்தைக் காண முடியும்? இவனை நீங்கள் அழைத்துப் போய் வளர்த்தால் உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு' என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.
அவன் அழுததைக் கண்ட ராஜுவும் பானுவும் ஆளுக்கு ஒரு பக்கமாக அவனைக் கட்டிக்கொண்டார்கள். அப்பாசாமி அவர்கள் இருவரையும் மார்போடு அணைத்துக்கொண்டான். வந்தவர்கள் அவன் குழந்தைகளின் பேரில் வைத்திருந்த வாத்ஸல்யத்தைக் கண்டு மனமிரங்கி, "நீங்கள் மூவருமே எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள். நாங்கள் காப்பாற்றுகிறோம். எங்கள் வீட்டுத் தோட்ட வேலையை நீ கவனித்துக்கொள். சொஸ்தமாய்க் கவலையற்று இருக்கலாம்" என்றார்கள்.
அப்பாசாமி பலமாகத் தலையை ஆட்டி, "முடியாது, முடியாது; நான் இந்தக் காட்டைவிட்டு வரவேமுடியாது.