உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மௌனப் பிள்ளையார்


"இதெல்லாம் என்ன கேள்வி ? உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது போலிருக்கிறது. நீங்கள் இந்த வீட்டுக்கு வந்துவிட்டீர்களானால் இதை விட்டுப் போகவே மாட்டேள். அப்புறம் நாம்பள்ளாம் ஒரு குடும்பம் மாதிரிதான்" என்று சிரித்துக்கொண்டே கூறினேன்.

"உமக்குக் குழந்தைக் குட்டிகளுண்டா?" என்று நான் கேட்கவேண்டிய கேள்வியை அவர் கேட்டார்.

"இனிமேல்தான் உண்டாகணும்..."

"அதிருக்கட்டும் வீணை, ஹார்மோனியம்... ஏதாவது?...." என்று கேட்டார்.

"பேசக்கூடாது... எங்க வீட்டில் யாருக்குமே பாட வராது" என்றேன்.

எருமை மாடு, பசுமாடு ஏதேனும் இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி.

"ஹூம்; பால் வெளியிலேதான் வாங்குகிறேன் " என்றேன்.

"இருந்தால் லக்ஷ்மீகரமாய் இருக்குமே! கிடக்கட்டும்; குலைக்கிற நாய் கீய் இருக்கிறதா?" என்றார் மேலும். எனக்கு ஆத்திரம் பொங்கிற்று. உடனே வாடகைப் பணம் ஞாபகம் வர அடங்கிப் போயிற்று.

"நாயே கிடையாது ஸ்வாமி. இனிமேல் ஏதாவது வந்தால்தான் உண்டு" என்று சொல்லிவிட்டு, "ஐயா, நான் எழுதும் பேனாமட்டும், 'கிறீச் கிறீச்' என்று சத்தம் போடும்" என்று எச்சரித்தேன்.

"அதனால் பரவாயில்லை" என்றார். பிறகு தான் அடுத்த சனிக்கிழமை குடி வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவர் நான் எதிர்பாராத விதமாய்க் குடியும் வந்துவிட்டார்.

அவர் குடும்பத்தில் இருந்த ஒன்பது ஜீவன்களையும் நவக்கிரகங்கள் என்றால் ரொம்பப் பொருத்தமாய் இருக்கும். அவருடைய பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. ஹார்