உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒண்டுக் குடித்தனம்

25


மோனிய சகிதமாய், அப்பப்பா! அது 'விடமுசாயவே' பாட ஆரம்பித்துவிட்டால், சுற்றுப் பக்கத்தில் ஏழேட்டு வீடுகளே அதிர்ந்து விடும். அந்தக் குடித்தனத்தில் யாருமே தூங்கமாட்டார்கள். நான் மட்டும் எப்படித் தூங்கமுடியும்? அவர் வந்து ஒரு மாதமாகியும் இன்னும் வாடகை கொடுத்த பாடில்லை. அன்றைக்கு வந்ததும் வராததுமாய் வாடகை என்னவென்று முதல் கேள்வி கேட்டானே எதற்காகக் கேட்டான்? நாளாக ஆக அந்த ஒண்டுக் குடித்தனக்காரனின் முழு யோக்யதையும் தெரிந்தது.

ஊரிலுள்ளவர்கள் என்னிடம் ரகசியமாக வந்து, 'ஐயையோ! அவனையா சேர்த்தாய்? அவன் பெரிய பொல்லாதவனல்லவா!" என்று துக்கம் விசாரித்தார்கள்.

இப்பொழுது கூடம் முழுவதும் ஆணியடித்துப் படங்களை மாட்டி வைத்திருக்கிறான். தினந்தோறும் காலையில் எழுந்ததும் வரட்டுத் தவளை மாதிரி நாலு ஸம்ஸ்கிருத சுலோகங்களைத் திரும்பத் திரும்ப நூறு தரம் சொல்ல ஆரம்பித்து விடுகிறான். அவன் மூட்டை முடிச்சுகளோடு சுமார் ஐயாயிரம் மூட்டைப் பூச்சிகளும் என் வீட்டுக்குக் குடிவந்து விட்டன. தெருவில் ஒரு பட்சத்திலும் அவன் விளக்குப் போடும் வழக்கம் கிடையாது.

வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியும் துடைப்பத்துக்கு ஒரு ஈர்க்குச்சிகூட அவன் வாங்கிப் போடவில்லை. ஆனால் பல் குத்துவதற்கென்று என் வீட்டுத் துடைப்பக் கட்டையிலிருந்து குச்சியை உருவிக்கொண்டு போகாத நாள் கிடையாது.

அவன் பசங்கள் செய்யும் லூட்டியோ சகிக்க முடியவில்லை. தவளை, நண்டு, ஊரிலிருக்கும் தென்னங்குறும்பைகள் ஓட்டாஞ்சல்லி அத்தனையும் 'ஸ்டாக்' சேர்க்கின்றன. நாயோடு அவை பண்ணும் கலாட்டாவை நான் என்ன சொல்ல?

அவன் மனைவி வாசலில் கூடைக்காரியைக் கூப்பிட்டு விட்டாளானால் போதும்; அடுத்தநாள் முதல் அந்தக் கூடைக்காரி இந்த வீட்டுப் பக்கம் நாடமாட்டாள். அவன் தன்