கையழுெத்து வேட்டை
31
மாப் புன்னகை புரிந்துவிட்டு "நான் கே.பி. மோஹினி இல்லை; நான் அவருடைய தங்கை!" என்றாள்.
✽
நாகராஜன் பெரிய ஏமாற்றத்துடன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான். இதற்குள் கடைக்காரன் நூறு மாம்பழங்களை எண்ணிக்கொண்டு வந்து காரில் வைத்து மீதிச் சில்லறையையும் கொடுத்துவிட்டுப் போனான்.
நாகராஜன் உற்சாக மிழந்தபோதிலும் முயற்சியை விடவில்லை. அந்தக் கார் நம்பரைக் குறித்து வைத்துக் கொண்டான். அது ஒரு டாக்ஸி என்பதைக்கூட அந்தச் சமயம் அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. கார் வந்த வழியே பறந்து சென்றதும் நாகராஜன் குழம்பிய மனத்துடன் பக்கத்துக் கடைக்குப் போய் அரை டஜன் புளிப்பு மாம்பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கிப் போனான்!
மறுதினமே நாகராஜன் எப்படியும் கே.பி. மோஹினியை நேரில் போய்ப் பார்த்து ஐந்து நிமிஷமாவது அவளுடன் பேசி ஒரு கையெழுத்தை வாங்கிவிடுவதென்று முடிவு செய்தான். அதற்கு ஒரே ஒரு தடங்கல் ஏற்பட்டது. மிஸ் கே.பி. மோஹினியின் விலாசம் தெரியாதே! அதற்கென்ன செய்வது? புத்திசாலியான நாகராஜனுக்கு மோஹினியின் விலாசத்தைக் கண்டுபிடிப்பதுதானா ஒரு பிரமாதமான காரியம்?
தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றில் யார் எந்த ஸினிமா நக்ஷத்திரங்களின் விலாசத்தைக் கேட்டாலும் தெரியப்படுத்துவதென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார் அதன் ஸினிமா ஆசிரியர். நாகராஜனுக்கு அப்போது அந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. உடனே "ஐயா ஆசிரியரே. மிஸ் கே. பி. மோஹினியின் விலாசத்தைக் கொஞ்சம் தயவு செய்து தெரிவிக்க முடியுமா?" என்று ஒரு கடிதம் எழுதிக் கேட்டான். அந்தப் பத்திரிகையின் ஸினிமா