இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கையழுெத்து வேட்டை
33
வாரப் பத்திரிகையில் தன்னுடைய விலாசம் வந்திருந்ததைச் சொல்லக்கேட்ட கே. பி. மோகினி அலறிப் புடைத்துக்கொண்டு, "ஐயையோ, அம்மா! என் விலாசம் ஒரு வாரப் பத்திரிகையில் போட்டிருக்கிறதாமே! எல்லாரும் சொல்கிறார்களே! அன்று என்னைப் பழக்கடையில் சந்தித்த பயித்தியம் தான் விலாசத்தைக் கேட்டிருக்கவேண்டும் நாளைக்கே அவன் இங்கு வந்து கையெழுத்தைப் போடு என்று என் பிராணனை வாங்கினால், நான் என்ன செய்வது? உடனே இந்த வீட்டை மாற்றியாக வேண்டும்" என்றாள்.
அன்றைக்கே, நாகராஜன் வருவதற்குள்ளாக மிஸ் மோகினி அந்த வீட்டைக் காலி செய்து வேறு வீட்டுக்குப் போன விஷ்யம் அவனுக்கு எங்கே தெரியப் போகிறது?
மௌ. பி.—3