உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மௌனப் பிள்ளையார்


என் மனைவியுடன் வருவதாகச் சொல்லி இதே செயினை அசல் தங்கம் என்றும் விலை ரூ. 258.78 என்றும் சொல்லும்படி ஏற்பாடு செய்திருந்தேன்.

சாயந்திரம் அதன்படியே மனைவியுடன் அந்த நகைக் கடைக்குப் போய் அதே செயினை ரூ. 258.78க்கு விலைபேசி வாங்கிக்கொண்டேன். ஆனால் - கடைக்காரனிடம் மனைவிக்குத் தெரியாமல் ரூ.3.20 கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன். அம்புஜத்திற்குச் சந்தோஷம் தாங்கவில்லை!

பத்து தினங்களில் தன் தங்கையைச் சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு மறு நாள் நான் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பின்வரும் விஷயத்தை என்னிடம் சொல்லி மூர்ச்சை போடச் செய்தாள்.

என் அத்தை பெண்ணை ஊருக்கு அனுப்பிவிட்டேன். அவளுக்காக ஐந்து சவரனில் புதிதாக வாங்கிய செயினைக் கொடுக்க எனக்கு மனசு வரவில்லை. ஆகையால் நான் போட்டுக் கொண்டிருந்த சங்கிலியை அவளிடம் கொடுத்தனுப்பிவிட்டேன். நான் இப்போது அழகாயிருக்கேன், இல்லையா?" என்று கேட்டுக்கொண்டே என் அருகில் வந்தாள்.