உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலியுகக் கர்ணன்

73

"ஐயோ! சித்ரலேகையின் மனத்தை மாற்றுவதற்காக கையிலிருந்த பணத்தையெல்லாம் தான தருமங்கள் செய்வதிலும் டாம்பீகச் செலவிலும் தீர்த்து விட்டேனே! இதை இப்போது சித்ரலேகையிடம் சொன்னால் என்ன சொல்வாளோ? என்ன நினைப்பாளோ?" என்று பாலகோபால் தலித்துப் போனார்.

ஆனால் சித்ரலேகைக்கும் தனக்கும் திருமணம் ஆகிற வரையில் அவர் இந்த ரகசியத்தை அவளிடம் வெளியிடவே யில்லை!