பக்கம்:ரமண மகரிஷி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16. ரமணர் காலமானார்!

ஞானி என்பவனுக்கு மரணமே கிடையாது என்று கூறியவர் மகரிஷி ரமணர்!

இரமணாசிரம் மாணவர்கள், மகரிஷி ரமணருடன் ஞான உரையாடல்களில் ஒரு முறை கலந்து கொண்ட போது, ஒரு மாணவன் மகரிஷியை நோக்கிக் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் இது.

“ஒரு பக்தன் எப்போதும் இறப்பதில்லை; ஏனென்றால், அவன் எப்போதோ இறந்துவிட்டான். மனிதன் வாழ்நாள் முழுவதும் எந்த எண்ணத்தை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அதையேதான் அவன் இறக்கும் போதும் நினைக்கிறான்” என்றார்.

“எடுத்துக் காட்டாக அவர் சொல்லும் போது, இல்லறத்தில் இருப்பவன் தன் குடும்பத்தைப் பற்றி நினைக்கிறான்; முற்றும் துறந்த துறவி கடவுளைப் பற்றி எண்ணுவான்; ஞானிக்கு வேறு நினைவு எதுவும் கிடையாதல்லவா?”

“அதனால் அவனுடைய நினைவு, சிந்தனைகள் எல்லாமே பல காலத்திற்கு முன்பே இறந்து விட்டதால், அவன் உடலும் அத்துடன் இறந்து விடுகிறது ஆகையால், அவனுக்கு மரணம், என்ற ஒன்று கிடையாது.” என்றார்.

மகரிஷி ரமணர் உலகப் பொருள்கள் எதன் மீதும் பற்று வைக்காத துறவியாக வாழ்ந்து காட்டினார். மதுரையை விட்டு அவர் அருணாசலம் தேடி திருவண்ணாமலை வந்துபோது, தன்னிடமிருந்த மிகுதிப் பணத்தை அங்கே இருந்த அய்யங்குளத்திலே வீசி எறிந்தார். சட்டையைக் கழற்றினார்; தான் கட்டியிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/101&oldid=1280178" இலிருந்து மீள்விக்கப்பட்டது