பக்கம்:ரமண மகரிஷி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

103


ஆசிரமத்துக்கு வெளியே இரண்டாயிரம் பக்தர்கள் கூடி நின்று, பகவான் உடல் நிலையைக் கேட்டு அருணாசல சிவா, அருணாசல சிவா எங்கள் மகரிஷியைக் காப்பாற்று என்று பஜனை பாடிக்கொண்டே கண்ணீர் சிந்தினார்கள்.

மாலை ஏழு மணி இருக்கும்! ரமணர் மூச்சுவிட வேதனைப் பட்டார்! அதனால் உடனிருந்த மருத்துவர்கள் அவருக்கு பிராணவாயு கொடுத்தார்கள். சிறிது நேரம் சென்ற பின்பு அந்த உயிர்க் காற்றும் நிறுத்தப்பட்டு விட்டது.

ஆசிரமத்துக்கு வெளியே அருளாளர் ரமணருடைய அருளாசிக்காகக் காத்துக் கிடந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திருவண்ணாமலை நகரத்து பக்தர் பெருமக்களோடு, கிராமப்புறத்துக் குடியானவர்களும், ஏழை மக்களும் புற்றீசல் போல நகரை மொய்த்துக் கொண்டு ‘அருணாசல சிவா, அருணாசல சிவா’ என்ற பஜனை ஒலிகளோடு பாடல்களை விடிய விடியப் பாடிய படியே இருந்தனர்.

பகவான் ரமண மகரிஷியின் சீடர்கள், ஆசிரமத் துறவிகள், பழநிசாமி சாமியார், திருவண்ணாமலை நகர் பிரபல செல்வர்கள், கல்விமான்கள், ஆன்மிகச் செல்வர்கள் அனைவரும் ரமணர் உடலைச் சூழ்ந்து வருத்தத்தெரிவித்து தங்களது கண்ணீர்த் துளிகளை சிதறிக் கொண்டிருந்தார்கள். மணி 8.47க்கு ரமண மகரிஷியின் ஆவி பிரிந்தது!

ஆன்மிக உலக மக்கள் ரமணர் மரணம் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். தியானம் திணறி அழுதது! தவம் தள்ளாடி தவித்தது! அவரது மௌனம், அவர் பிறந்த திருச்சுழியில் ஓடும் கௌடின்ய நதியின் கோடை மணல் ஊற்றுக் கண்போல வறண்டு வற்றியது.

தமிழ் நாட்டு ஆன்மீக உலகமும், திருவண்ணாமலை நகரின் ஆயிரக்கணக்கான மக்களும், ரமணருக்குத் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்திய பிறகு, யோகாசன நிலையில் அவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/105&oldid=1280176" இலிருந்து மீள்விக்கப்பட்டது