பக்கம்:ரமண மகரிஷி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

ரமண மகரிஷி



அமர வைத்து, கற்பூரம், விபூதி, உப்பு ஆகியவற்றையிட்டுப் புதைத்தார்கள்.

ரமண ரிஷியின் நினைவு என்றும் திருவண்ணாமலையிலே நிலைக்குமாறும், ஆன்மிக உலகம் அவரை என்றும் நினைவிலே நிறுத்திக் கொள்ளுமாறும், ஞானம் விளையும் அருணாசல மலையானது; எவ்வாறு பல யோகிகளை, சித்தர்களை, ஞானிகளை, அருளாளர்களை, பக்திப் பனுவல்களைப் பாடிய பாவலர்களையும் வளர்த்த ஞான வரலாற்றை ஆன்மீக உலகுக்கு வழங்கி, மக்களை உய்வித்துப் புகழ்பெற்று வருகின்றதோ, அந்த ஞான ஒளிவட்டத்தின் அருளாளர் புள்ளிகளுள் ஒரு புள்ளியாக ரமணமகரிஷியையும் அருணாசலம் ஏற்றுக் கொண்டது. வாழ்க அருணாசலம் புகழ்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/106&oldid=1280175" இலிருந்து மீள்விக்கப்பட்டது