பக்கம்:ரமண மகரிஷி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ரமண மகரிஷி


மூன்று மக்களும் மூன்று விதமான போக்காகவே வளர்ந்து வந்தார்கள். அதாவது, எப்போதும் விளையாட்டாகவும், துஷ்டர்களாகவும் காட்சி தந்தார்கள் எனலாமே தவிர, அவர்களுடைய அறிவாற்றலுக்கு அடையாளமாக எதையும் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்களாகவே இருக்கவில்லை.

இரமணருடைய தம்பியான நாக சந்தரம் அப்போது மிகவும் சிறுவன், அவளைப் பற்றிக் கூறிட என்ன இருக்கிறது? ஆனால், அவருடைய தமையனாரான நாகசாமி, கல்வியில் திறமையாளர். வீட்டிலும் புத்தகத்தோடே உறவாடிப் பேசுவார். வகுப்பிலும் சரி, தேர்வு எழுதுவதிலும் சரி, ஆசிரியரிடம் பாட விவரங்களுக்காக வாதாடும் போதும் சரி, அவர்தான் வகுப்புப் பிள்ளைகளை மீறி முதல் மாணவனாக இருப்பார். அவ்வளவு அக்கறையுடன் படித்து, தனது தந்தையின் புகழுக்கும் பெயருக்கும் அந்த இளம் வயதிலேயே மேலும் பெருமை தேடிக் கொடுத்து மகிழ்வார்.

சுந்தரமய்யர் நண்டர்களும், அவரது உதவி பெறும் ஊர் மக்களும், வழக்குகளுக்காக வரும் கட்சிக்காரர்களும், அன்னசத்திரத்துக்கு வாடிக்கையாக வந்து போபவர்களும் நாகசாமியைப் பற்றி, அவரது தந்தையிடம் ஏதாவது பாராட்டுதல்களைக் கூறாமல் போகமாட்டார்கள்.

ஆனால், நடுமகன் இருக்கிறாரே வெங்கட்ராமன், அவரைப் பற்றி ஏதாவது சிறப்புக்கள் தெரிந்தாலும், அதைச் சுந்தரமய்யரிடம் கூறமாட்டார்கள். அவரைப் பற்றி எந்த முடிவையும் எவரும் துணிந்து அய்யரிடம் தாரளமாகக் கூறிட மனம் வராது. ஏன் தெரியுமோ?

இரமணர் எப்போதும், எந்நேரமும் எதையோ பறிகொடுத்து விட்டு ஏமாந்தவனை போன்ற சிந்தனையிலேயே மூழ்கிக் கிடப்பார். இந்த இளம் பிராயத்தில் அப்படி என்ன சிந்தனையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/16&oldid=1280084" இலிருந்து மீள்விக்கப்பட்டது