பக்கம்:ரமண மகரிஷி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

15


என்று சிலர் எண்ணியவாறே அவரிடம் பேசாமல் போய்க் கொண்டே இருப்பார்கள். சில நண்பர்கள் வெங்கட்ராமனோடு விளையாடுவோம் என்று ஆர்வத்துடன் வருவார்கள். வந்தவர்களிடம் ஏதும் பேசாமல் ஊமை போல அவர் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுப் பரிதாபம் சூழ்ந்தவராகப் போய்விடுவார்கள்.

எனவே, வெங்கட்ராமன் மணிக் கணக்கில் அப்படியே கற்சிலை போல உட்கார்ந்தபடியே இருப்பார். ஆனால், என்னமோ யோசித்துக் கொண்டிருப்பது போலவே தென்படுவார் காட்சிக்கு! அவரையொத்த சிறுவர்களால் வெங்கட்ராமனை ஒதுக்கிவிட்டு விளையாடவும் முடியாது.

வெங்கட்ராமன் துணிச்சலுடைய சிறுவன்; தைரியசாலி; தவறாமல் உடற் பயிற்சி செய்யும் குணம் உடையவன்; சில ஊர்களில் தாதாக்களும் உண்டல்லவா? அவர்களிடம் குஸ்தி, மல்யுத்தம், சிலம்பம் போன்ற ஆட்டங்களைக் கற்றுத் தனது உடலைக் கட்டு மஸ்தான ஒரு பயில்வானைப் போல் அவர் வைத்துக் கொள்வார். பந்தாட்டத்தில் மிக வல்லவனாக இருந்தார். கிராமத்துக்கு அருகிலேயே கௌண்டின்ய ஆறு ஓடுகிறது அல்லவா?

அந்த ஆற்றை நீந்தி நீந்தி இக்கரை அக்கரையாகக் கடப்பார். மரக்கிளையின் உச்சியிலே இருந்து ஆற்று நீரின் ஆழப் பகுதி பார்த்துக் குதிப்பார். மணிக் கணக்கில் நீந்திக் கொண்டே மற்ற பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டு நீராடி மகிழ்வார். நேரம் போவதே அவருக்குத் தெரியாது. மரமேறி ஏறி, மற்ற சிறுவர்களையும் ஏறச் சொல்லித் தாண்டிக் குதிக்க வைப்பார்.

அதே போலவே, திருச்சுழி கிராமத்து வம்பர்களிடம், தாதாக்களிடம் சண்டை, சச்சரவுக்கு வலிய சென்று அவர்களை வம்புக்கு இழுத்து மல்லடிப்பார். அவர்கள் அய்யர் பிள்ளையாயிற்றே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/17&oldid=1280085" இலிருந்து மீள்விக்கப்பட்டது